275 பேர் கொல்லப்பட்ட ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் 51 மணிநேரத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் விபத்து நடந்த இடத்தில் உள்ள இரண்டு ரயில் தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அந்தப் பகுதியில் ரயில் இயக்கம் மீண்டும் தொடங்கி இருக்கிறது.
நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்று நடந்த 51 மணிநேரத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. பாலசோரில் நடந்த மூன்று ரயில் விபத்தில் குறைந்தது 275 பேர் கொல்லப்பட்டனர். 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தியாவையே உலுக்கிய ரயில் விபத்து.. சிபிஐ விசாரிக்க பரிந்துரை - ரயில்வே துறை அமைச்சர் தகவல் !!
கப்பட்ட தண்டவாளத்தின் வழியாக மீண்டும் ரயில் சென்றபோது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதனை நேரில் பார்வையிட்டார். "இரண்டு தண்டவாளங்களும் சீரமைக்கப்பட்டுவிட்டன. 51 மணிநேரத்திற்குள், சீரமைப்புப் பணி முடிந்துள்ளது. இனி ரயில் இயக்கம் தொடங்கும். இந்தப் பாதை இப்போது ரயில்களை இயக்க ஏற்றதாக உள்ளது." என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறி இருந்தார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் முன்னிலையில் பாலசோரில் உள்ள ரயில் பாதைகளில் தடையின்றி ரயில் இயக்கம் தொடங்கிய வீடியோவை அமைச்சர் பகிர்ந்துள்ளார். ரயில் சென்றபோது, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தார்.
ரயில்வே அமைச்சர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "தண்டவாள மறுசீரமைப்பு முடிந்தது. மீண்டும் முதல் ரயில் இயக்கம்" என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார். முன்னதாக, அப்-லைனை இணைப்புப் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மேல்நிலை மின்மயமாக்கல் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, ரயில் விபத்தில் காணாமல் போனவர்கள் குறித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காணாமல் போனவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் விரைவில் இணைக்க வேண்டும் என்பதே தமது நோக்கமாகும் என்றார். விபத்து நடந்த பகுதியை முழும்ஐயாக இயல்பு நிலைக்கு கொண்டுவர தீவிரமாக பணிகள் நடப்பதாவும் அமைச்சர் தெரிவித்தார்.
டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து கொலைவெறி! 3 மாதமாக திட்டம் போட்டு கொலை ஆசையை நிறைவேற்றிய இளம்பெண்!
வெள்ளிக்கிழமை நடந்த மூன்று ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 288 இல் இருந்து 275 ஆக திருத்தப்பட்டது. சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதாக ஒடிசா அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்னும் 187 உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்படாத நிலையில், உறவினர்கள் வந்து உரிமை கோரும்வரை உடல்களை பாதுகாத்து வைத்திருப்பது உள்ளூர் நிர்வாகத்திற்கு சவாலாக உள்ளது. இதனால், பல உடல்கள் பாலசோரில் இருந்து புவனேஷ்வருக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
