இந்தியாவையே உலுக்கிய ரயில் விபத்து.. சிபிஐ விசாரிக்க பரிந்துரை - ரயில்வே துறை அமைச்சர் தகவல் !!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

Railway Minister Ashwini Vaishnaw recommends CBI inquiry in Balasore train accident

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பகுதியில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் 200-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், தற்போது தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. தண்டவாளத்தை சரி செய்து ரயில் போக்குவரத்திற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Railway Minister Ashwini Vaishnaw recommends CBI inquiry in Balasore train accident

இதையும் படிங்க..ஒடிசா ரயில் சோகத்திற்கு ‘முக்கிய’ காரணம் இதுதான்.! ரயில்வே ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | முழு பின்னணி

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்தார். சம்பவ இடத்திற்கு 2ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ள அவரை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, சீரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், இனி எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. மீட்பு பணிகள் நிறைவடைந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்டவாளம் தொடர்பான பணிகள் முடிந்து மேல்நிலை வயரிங் பணி நடந்து வருகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க..பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதா? அன்று தஞ்சாவூர்! இன்று சென்னையா? கொதிக்கும் ஆர்வலர்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios