Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாளில் 75 பாலிசி வித்துட்டு வா.. கடுப்பான ஹெச்டிஎஃப்சி மேனேஜர் - சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ

ஹெச்டிஎஃப்சி மேனேஜர் ஒருவர் தனது கீழ் வேலை செய்யும் ஊழியர்களை திட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

HDFC bank manager suspended after video of him abusing employees goes viral
Author
First Published Jun 5, 2023, 8:17 PM IST

சௌமி சக்ரவர்த்தி என்பவர் LinkedIn தளத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ பகிர்ந்தார். அது HDFC வங்கியின் ஆன்லைன் மீட்டிங் வீடியோ ஆகும். அதில் மூத்த துணைத் தலைவர் புஷ்பால் ராய் தலைமையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வெளிப்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

HDFC bank manager suspended after video of him abusing employees goes viral

பெங்காலி மொழியில் உள்ள வீடியோவில், புஷ்பால் ராய் தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் பணி நிலையை கேவலமாக பேசுகிறார். புஷ்பால் ராய் இரண்டு முறை கடுமையான தொனியில் ஊழியர்களிடம் "வாயை மூடு" என்று கூறுவதைக் கேட்கலாம். உனக்கு எனது CPI மதிப்பெண் 77, இன்று நான் உங்களுக்கும் HR மெமோவை வழங்குகிறேன்" என்றார் ஆவேசமாக கூறுகிறார்.

வீடியோ வைரலானதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள அதிகாரியை ஹெச்டிஎஃப்சி வங்கி சஸ்பெண்ட் செய்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி, “இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறியது. வீடியோவில், மேலாளர் தனது கீழ் வேலைபார்க்கும் ஊழியரிடம் ஒரு நாளில் 75 இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கும்படி கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதா? அன்று தஞ்சாவூர்! இன்று சென்னையா? கொதிக்கும் ஆர்வலர்கள்

இதையும் படிங்க..ஒடிசா ரயில் சோகத்திற்கு ‘முக்கிய’ காரணம் இதுதான்.! ரயில்வே ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | முழு பின்னணி

Follow Us:
Download App:
  • android
  • ios