Published : Jul 03, 2023, 06:04 AM ISTUpdated : Jul 04, 2023, 12:17 AM IST

Tamil News Live Updates : அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் பிரிவில் வழக்கு பதிவு

சுருக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார். இது பெரும் பரபரப்பை அரசியல் வட்டாரங்களில் கிளப்பியுள்ளது.

Tamil News Live Updates : அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் பிரிவில் வழக்கு பதிவு

12:17 AM (IST) Jul 04

130 கி.மீ வேகம்.. சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகிறது - முழு விபரம்

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களை இங்கு காணலாம்.

11:22 PM (IST) Jul 03

வாட்ஸ்அப்பில் பாலியல் தொழில்.. 3 சிறுமிகளை சீரழித்த 11 பேர் - சென்னையை நடுங்க வைத்த கொடூர சம்பவம்

சென்னையில் 3 சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10:59 PM (IST) Jul 03

அமைச்சருக்கு வாய் மட்டும்தான்.. விடியா அரசின் கொடுமைகள்.! திமுகவை விளாசிய எடப்பாடி பழனிச்சாமி

விடியா திமுக ஆட்சியாளர்களுக்கு, வாக்களித்த பாவத்திற்காக அப்பாவி தமிழக மக்கள் புதை குழிக்குள் செல்லும் கொடுமை அரங்கேறி வருகிறது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

10:14 PM (IST) Jul 03

TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது? விரைவில் வெளியாகும் குட் நியூஸ் இதுதான்.!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகள் முடிவுகள் இந்த ஆண்டு வரிசையாக வெளியிடப்பட்டு வருகிறது.

09:13 PM (IST) Jul 03

Jio Bharat : வெறும் ரூ.999க்கு கிடைக்கும் ஜியோ பாரத் போன்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

ஜியோ பாரத் என்ற 4ஜி தொழில்நுட்ப ஃபோனை ஜியோ நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் பல்வேறு சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

08:43 PM (IST) Jul 03

குழந்தை விவகாரம்: இதனால்தான் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? விஜயகாந்த் கேள்வி !!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் விஜயகாந்த்.

08:03 PM (IST) Jul 03

டெல்லி சர்ச்சை: அரசு விளம்பரங்களுக்காக ரூ.1106.02 கோடி செலவழித்த ஆம் ஆத்மி - அஜய் மக்கன் சுளீர் !!

ஆம் ஆத்மி (AAP) அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் டெல்லியில் CAPEX இன் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது வேலையின்மை மற்றும் வறுமைக்கு பங்களித்தது. அரசு விளம்பரங்களுக்காக ரூ.1106.02 கோடி செலவழித்துள்ளது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் அஜய் மக்கன்.

07:13 PM (IST) Jul 03

நெல்சா வேறமாரி... வேறமாரி! ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் உடன் வந்த அட்டகாசமான புரோமோ இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

07:12 PM (IST) Jul 03

கட்சிகளை உடைக்க நேரம் இருக்கு.. ராணுவத்தில் காலியிடங்களை நிரப்ப முடியாதா? மல்லிகார்ஜுன கார்கே விளாசல்

மோடி அரசுக்கு கட்சிகளை உடைக்க நேரம் உள்ளது, ஆனால் ஆயுதப்படைகளில் முக்கியமான காலியிடங்களை நிரப்ப முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.

06:52 PM (IST) Jul 03

எங்ககிட்டயே நடிக்கிறீயா; போலீசிடம் செம்ம டோஸ் வாங்கிய ரச்சிதா- மாங்காடு ஸ்டேஷனில் நடந்த ஷாக்கிங் சம்பவம்

தன்னுடைய கணவர் தினேஷ் தனக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வருவதாக நடிகை ரச்சிதா கூறியது பொய் என மாங்காடு போலீசார் கண்டுபிடித்து அவரை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

06:41 PM (IST) Jul 03

WhatsApp : இந்தியாவில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மெட்டா - ஏன் தெரியுமா?

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, வாட்ஸ்அப் இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான மோசடி கணக்குகளை தடை செய்துள்ளது.

06:40 PM (IST) Jul 03

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி என தகவல்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

05:39 PM (IST) Jul 03

பிரபல யூடியூபர் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

தமிழ் திரையுலகில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம்.

05:36 PM (IST) Jul 03

Chandrayaan-3 : சந்திரயான் - 3 விண்ணில் ஏவப்படும் தேதியை அறிவித்தார் இஸ்ரோ தலைவர் - எப்போது தெரியுமா?

சந்திரயான்-3 ஜூலை 13 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் அறிவித்துள்ளார்.

05:09 PM (IST) Jul 03

வானதி சீனிவாசன் மீது திமுகவினர் புகார்!

திமுக எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்

05:09 PM (IST) Jul 03

சூடுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 300 ஊழியர்களுக்கு குறி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவுப்படுத்தி உள்ளனர்.

04:19 PM (IST) Jul 03

மாட்டிவிட்டுட்டியே பங்கு... நடிகர் தனுஷுக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தை அமபலப்படுத்திய ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலப்பிரச்சனையில் இருந்து மீண்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில், அவர் தனுஷுக்கு உள்ள கெட்ட பழக்கம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

03:58 PM (IST) Jul 03

சரத் பவார் முகாமுக்கு திரும்பிய அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ

அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ., அமோல் கோல்ஹே மீண்டும்  சரத் பவார் முகாமிற்கு திரும்பியுள்ளார்

03:39 PM (IST) Jul 03

திமுகவிலும் சாதி பாகுபாடு... பா.இரஞ்சித் குற்றச்சாட்டுக்கு பதறிப்போய் விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின்

திமுகவிலும் சாதிப் பாகுபாடு இருக்கிறது என பா.இரஞ்சித் கூறியிருந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.

03:15 PM (IST) Jul 03

தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

தமிழ் திரைத்துறை சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

02:32 PM (IST) Jul 03

மாரிக்கு வாரிக் கொடுத்த உதயநிதி... மாமன்னன் படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் மாமன்னன் படத்தை இயக்க மாரி செல்வராஜ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது..

02:16 PM (IST) Jul 03

இனி அந்த தவறு நடக்காது - திருமாவளவன் விளக்கம்

மாற்றுத் திறனாளிகள் தொடர்பான பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்

02:16 PM (IST) Jul 03

சரத் பவாருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்

01:32 PM (IST) Jul 03

மதுரை ஐ.டி. நிறுவனத்தில் அண்ணாமலை மனைவி மறைமுக பங்குதாரர்?

மதுரை ஐ.டி. நிறுவனத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மனைவி மறைமுக பங்குதாரராக உள்ளர் என கூறப்படும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

01:32 PM (IST) Jul 03

சிங்கப்பூரில் ஆண் நண்பருக்கு பாலியல் வன்கொடுமை

சிங்கப்பூரில் ஆண் நண்பரை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 12 கசையடி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

01:02 PM (IST) Jul 03

ஆர்.என்.ரவிக்கு பாஜக அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் -மு.க.ஸ்டாலின்

அமலாக்கத்துறை நடவடிக்கையால் பாஜக மீதான தனது நிலைப்பாட்டை திமுக மாற்றிக்கொள்ளாது என தெரிவித்த ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கிடைக்க கூடாது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடாது என ஆளுநர் ரவி விரும்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

01:00 PM (IST) Jul 03

தன்னை சந்திக்க வந்தவர்களை நிற்க வைத்தும்,அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கொண்டும் பேசுவதுதான் சமத்துவமா.? சீமான்

மக்களால் மாண்புமிகு அமைச்சர் என்று மரியாதையோடு அழைக்கப்படும் உயர்ந்த பொறுப்பினை வகிப்பவர் சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

12:59 PM (IST) Jul 03

நான் மேற்கொண்ட மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களை ஒரு படத்திலும் காட்டவில்லை - கிருஷ்ணசாமி ஆதங்கம்

கசப்புகளை மறந்து நாங்கள் அண்ணன், தம்பியாக பழகத் தொடங்கிவிட்ட நிலையில் 40 ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் கடந்த கால கலவரங்களை திரைப்படங்களாக எடுப்பது ஏன் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

12:59 PM (IST) Jul 03

நடிகர் ரஜினியை திடீரென நேரில் சந்தித்த திமுக மூத்த அமைச்சர்..! என்ன காரணம் தெரியுமா..?

திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகர் ரஜினி காந்தை, தமிழக மூத்த அமைச்சர் எ.வ வேலு சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

12:56 PM (IST) Jul 03

உறவினர்கள் உதவியுடன் கணவனை கொலை செய்த பெண்; உடலை மறைத்தபோது சிக்கிய மனைவி

திருச்சியில் மதுபோதையில் தகராறு செய்த கணவனை உறவினர்கள் உதவியுடன் கொலை செய்துவிட்டு உடலை மறைக்க முயன்றபோது காவல் துறையினரிடம் சிக்கிய மனைவி உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர்.

11:48 AM (IST) Jul 03

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு: ரூ.1,33,100 லட்சம் வரை சம்பளம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

11:47 AM (IST) Jul 03

மூன்று மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையாதக கூறப்படும் வழக்கு தொடர்பாக மூன்று மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்

11:47 AM (IST) Jul 03

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிர துணை முதல்வரான நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது

06:52 AM (IST) Jul 03

டிசம்பரில் நாடாளுமன்றத் தேர்தல்.? திட்டமிடும் மோடி, அமித்ஷா.! திமுகவினரை அலர்ட் செய்யும் டி.ஆர்.பாலு

நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என நாடு முழுவதும் பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்திலேயே தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக திமுக பொருளாளர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

06:33 AM (IST) Jul 03

அண்ணன் மகனை வழிக்கு கொண்டு வந்த பாஜக.. 2009 பிரச்சனை தான் காரணமே.! பரபர திருப்பம்

மகாராஷ்டிராவில் சரத் பவாரின் NCP கட்சி உடைந்தது. அந்த கட்சியின் கிட்டத்தட்ட 3/4 பங்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் அஜித் பவார்.

06:32 AM (IST) Jul 03

மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது கர்நாடகவின் அரசியல் ஸ்டண்ட்..! வாய்ப்பே இல்லை- துரைமுருகன் மீண்டும் உறுதி

மேகதாதுவில் அனைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டு இருக்கலாம் என்னைப் பொறுத்தவரையில் கர்நாடகாவின் அரசியல் ஸ்டண்ட் அது, அவர்களால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


More Trending News