மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது கர்நாடகவின் அரசியல் ஸ்டண்ட்..! வாய்ப்பே இல்லை- துரைமுருகன் மீண்டும் உறுதி

மேகதாதுவில் அனைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டு இருக்கலாம் என்னைப் பொறுத்தவரையில் கர்நாடகாவின் அரசியல் ஸ்டண்ட் அது, அவர்களால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Duraimurugan has said that there is no chance of building a dam in Mekedatu by the Karnataka government

 டென்மார்க் அரசின் நீர்வளத்திட்டம்

அரசு முறை பயணமாக டென்மார்க் சென்று திரும்பிய நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீர்வளத் துறையில் எப்படி சிக்கனத்தை பயன்படுத்துவது நீர்வளத் துறையில் நீரை எப்படி பாதுகாப்பது உலகத்திலேயே முன்னோடி திட்டமாக இருப்பது டென்மார்க். எனவே சென்னையில் இருக்கக்கூடிய இது போன்ற ஆறுகளிலும் சீரமைக்க வேண்டிய எண்ணம் அரசுக்கு உள்ளதாக தெரிவித்தவர், அங்கு இருக்கக்கூடிய நீர்வளத்துறை அமைச்சர் உடன் நீண்ட நேரம் நம்முடைய நிலைமைகளை எடுத்துச் சொன்னோம் அவர்களும் கனிவாக கேட்டதாக தெரிவித்தார்.  

Duraimurugan has said that there is no chance of building a dam in Mekedatu by the Karnataka government

முதலமைச்சரோடு இன்று ஆலோசனை

ஒரு வாரம் காலத்திற்குள் டென்மார்க் அதிகாரிகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பு உள்ளனர்.நம்முடைய அதிகாரிகளுடன் உட்கார்ந்து பேசி என்ன நிலைமை என்று நேரில் கண்டு நம்மோடு பேசிய பிறகு ஒரு திட்டம் வகுக்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுப்போம் என உறுதியாக கூறியுள்ளது தொடர்பாகவும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மாட்டோம் என கூறியுள்ளது தொடர்பான  கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்று காலையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க உள்ளேன். இதனை தொடர்ந்து மீண்டும் நானே டெல்லி சென்று காவேரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

Duraimurugan has said that there is no chance of building a dam in Mekedatu by the Karnataka government

கர்நாடகாவின் அரசியல் ஸ்டண்ட்

காவேரியின் நிர்வாகத்தை தற்போது காவேரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது வழக்கு தீர்ந்து இதுதான் முடிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருக்கக்கூடிய நீர்நிலைமை என்ன என்று எனக்குத் தெரியாது, இருந்தாலும்  தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேச முடியாது. பேசினாலும் அது தப்பு, அது முடிந்து போன விவகாரம், தமிழ்நாடு கவனிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் ஒரு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் கர்நாடகாவின் அரசியல் ஸ்டண்ட் அவர்களால் ஒன்றும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Duraimurugan has said that there is no chance of building a dam in Mekedatu by the Karnataka government

அணை கட்ட வாய்ப்பே இல்லை

எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, சட்டப்படியும் அது முடியாது, வேண்டுமென்றால் அவர்கள் அனைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டு இருக்கலாம் என விமர்சித்தார். கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இரண்டுமே அண்டை மாநிலங்கள் ஏராளமான தமிழர்கள் கர்நாடகாவில் வசிக்கின்றனர். ஏராளமான கர்நாடக மாநிலத் அவர்கள் தமிழகத்தில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆகவே இவை எல்லாம் பாதகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான் இரண்டு அரசுகளினுடைய போக்கு. அதை தமிழ்நாடு அரசு உணர்கிறது.  உள்ளபடியே அவர்களும் உணர்வார்கள் என்று கருதுவதாக துரைமுருகன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

மத்திய அரசோடு எது எதற்கோ மோதும் தி.மு.க.! மேகதாதுக்காக 38 எம்பிக்களோடு டெல்லியில் முற்றுகையிடுங்கள் - இபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios