MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • விஜய்க்கு முதலமைச்சர் பதவி.! பவன்கல்யான் கோரிக்கைக்கு இறங்கி வந்த எடப்பாடி.! இனிதான் ஆட்டமே இருக்கு

விஜய்க்கு முதலமைச்சர் பதவி.! பவன்கல்யான் கோரிக்கைக்கு இறங்கி வந்த எடப்பாடி.! இனிதான் ஆட்டமே இருக்கு

ஆந்திர அரசியலில் வெற்றி கண்ட பவன் கல்யாண், அதே வியூகத்தை தமிழகத்தில் செயல்படுத்த முயல்கிறார். இதன் விளைவாக, எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு 70 தொகுதிகள் மற்றும் விஜய்க்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க சம்மதித்துள்ளதாக தெரிகிறது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 14 2026, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
செக் மேட் ரெடி.! மீண்டும் முலமைச்சராக நடிகர்.!
Image Credit : Asianet News

செக் மேட் ரெடி.! மீண்டும் முலமைச்சராக நடிகர்.!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மெகா கூட்டணியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆந்திர அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்து, தற்போது துணை முதலமைச்சராக ஜொலிக்கும் பவன் கல்யாண், தமிழக அரசியலிலும் தனது 'சாணக்கிய' வியூகத்தை வகுக்கத் தொடங்கியுள்ளார். இதன் விளைவாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஒரு முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆந்திரா மாடல் - தமிழகத்தில் சாத்தியமா?
Image Credit : Asianet News

ஆந்திரா மாடல் - தமிழகத்தில் சாத்தியமா?

ஆந்திராவில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளை ஒருங்கிணைத்து, என்டிஏ (NDA) கூட்டணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பவன் கல்யாண். அதே ஃபார்முலாவை தற்போது தமிழகத்திலும் செயல்படுத்த அவர் களம் இறங்கியுள்ளார். நடிகர் விஜய் மீதான தனது நன்மதிப்பைப் பயன்படுத்தி, அதிமுக - தவெக - பாஜக ஆகிய கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர அவர் எடுத்த முயற்சிகள் தற்போது பலன் தரத் தொடங்கியுள்ளன.

35
எடப்பாடியின் இறங்கி வரும் போக்கு: 70 தொகுதிகள் + 2.5 ஆண்டுகள்!
Image Credit : Asianet News

எடப்பாடியின் இறங்கி வரும் போக்கு: 70 தொகுதிகள் + 2.5 ஆண்டுகள்!

ஆரம்பத்தில் மெகா கூட்டணியில் தலைமை இடத்தைப் பிடிப்பதில் பிடிவாதமாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது எதார்த்த அரசியலை உணர்ந்து சில நிபந்தனைகளுக்குச் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பவன் கல்யாணின் கோரிக்கையை ஏற்று, தமிழக வெற்றிக் கழகத்திற்கு 70 தொகுதிகள் ஒதுக்க எடப்பாடி சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது. மிக முக்கியமாக, ஆட்சியில் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில், ஐந்து ஆண்டுகளில் இரண்டரை ஆண்டுகள் விஜய்க்கு முதலமைச்சர் பதவி என்ற அதிரடி நிபந்தனைக்கு எடப்பாடி தரப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.

45
பின்னணியில் பாஜகவின் நிதி பலம்?
Image Credit : X

பின்னணியில் பாஜகவின் நிதி பலம்?

இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்த பாஜக தரப்பில் இருந்து தேர்தல் செலவுகளுக்கான முழு நிதி ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக எனும் பலமான அரணைத் தகர்க்க வேண்டுமானால், வாக்குகள் சிதறாமல் இருக்க இத்தகைய ஒரு மெகா கூட்டணி அவசியம் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துள்ளனர்.

55
இனிதான் ஆட்டமே இருக்கு!
Image Credit : Asianet News

இனிதான் ஆட்டமே இருக்கு!

விஜய்யின் மக்கள் செல்வாக்கு, அதிமுகவின் கட்டமைப்பு, மற்றும் பவன் கல்யாணின் அரசியல் வியூகம் என மூன்றும் இணைந்தால், அது வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை" என்ற பழமொழிக்கு ஏற்ப, விஜய்க்காக எடப்பாடி இறங்கி வந்திருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டிவி.கே. விஜய்
அதிமுக பாஜக கூட்டணி
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
உண்மையை போட்டுடைத்த பெருமாள் முருகன்.. பொங்கியெழுந்த முதல்வர் விஜய்.. பெரியார் அறிவுலக‌த்தில் நடந்தது என்ன?
Recommended image2
பிரியாணிக்கு ஆசைப்பட்ட சீமான்.. தயிர் சாதம் கூட இல்ல‌.. கைவிரித்த ஸ்டாலின், இபிஎஸ்? அடுத்தது என்ன?
Recommended image3
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Related Stories
Recommended image1
Vijay In NDA?: திராவிடக் கோட்டையைத் தகர்க்கும் வியூகம்! பவன் கல்யாண் முன்னெடுக்கும் 'மெகா பிளான்'!
Recommended image2
TVK Vijay: விஜய் செய்யப்போகும் மாயாஜாலம்.! வாக்கு அறுவடைக்கு தயாராகும் 'பெண்கள் படை'!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved