TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது? விரைவில் வெளியாகும் குட் நியூஸ் இதுதான்.!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகள் முடிவுகள் இந்த ஆண்டு வரிசையாக வெளியிடப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றது. அரசுத் துறைகளில் அமைச்சுப் பணிகளில் இருப்பவர்கள் தலைமைச் செயலகப் பணிகளுக்கு செல்வதற்காக குரூப் 5ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர், உதவியாளர் உட்பட பதவிகளில் உள்ள 161 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 5 தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்ற செப்டம்பர் 21 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.
குரூப் 5ஏ தேர்வெழுத 383 பெண்கள் உட்பட மொத்தம் 1, 114 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னையில் டிசம்பர் 18-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிந்து சுமார் 7 மாதங்களாகிவிட்ட சூழலில், முடிவுகள் இன்னும் வெளியாகாமல் இருப்பது தேர்வர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே இதுபற்றி கூடியிருந்த டிஎன்பிஎஸ்சி, குரூப் 5ஏ தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே மாதம் நடத்தி பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஜூலை மாதம் வந்துவிட்டதால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இது போட்டித்தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
RBI Recruitment 2023 : ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு - முழு விபரம்