சூடுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 300 ஊழியர்களுக்கு குறி.! மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவுப்படுத்தி உள்ளனர்.
சென்னை, கரூர், ஈரோடு, கோவையில் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜிவீட்டில் கடந்த 13-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இதனால், ஏற்கெனவே 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அசோக்குமாரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் ஏற்கெனவே 2 முறை சம்மன் அனுப்பியிருந்தனர்.
அண்ணன் மகனை வழிக்கு கொண்டு வந்த பாஜக.. 2009 பிரச்சனை தான் காரணமே.! பரபர திருப்பம்
இந்த சம்மனை ஏற்ற அசோக்குமார், இரு முறையும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், ஜூலை 27 ஆம் தேதிவிசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பிஉள்ளனர். இந்த சம்மனுக்கும் அவர் ஆஜராகவில்லை எனில், நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறையினர் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவுப்படுத்தி உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, போக்குவரத்து துறையில் 2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் முதற்கட்டமாக 300 போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான பல்வேறு விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று முடிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சூடுபிடித்துள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே கேள்வியாக இருக்கிறது.
அம்மா உணவகம்: ஏழை மக்கள் 3 வேலை சாப்பிடுவது உங்களுக்கு பிடிக்கலையா.? திமுகவை வெளுக்கும் இபிஎஸ்