பிரபல யூடியூபர் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல யூடியூபர் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.
nayanthara
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் ஏராளமான படங்கள் உருவாகி வருகின்றன. தற்போது நயன்தாரா நடித்துள்ள முதல் இந்திப் படமான ஜவான் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
nayanthara
இதையடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அஹமத் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இதில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. தனி ஒருவன் படத்துக்கு பின் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... பாலிவுட்டிற்கே பயம் காட்டிய ரஜினி! ஜெயிலர் படத்துக்கு போட்டியாக ரிலீஸாக இருந்த இந்தி படம் திடீரென தள்ளிவைப்பு
nayanthara
இதுதவிர நயன்தாரா நடிக்கும் 75-வது படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் நயனுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் படமொன்றிலும் நாயகியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் நயன்.
Dude vicky, nayanthara
இப்படி வரிசையாக படங்களில் கமிட் ஆகி வரும் நயன்தாரா, தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளாராம். இப்படத்தை கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாக உள்ள இத்திரைப்படத்தை பிரபல யூடியூபரான டியூடு விக்கி தான் இயக்க உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். நடிகை நயன்தாரா யூடியூபர் ஒருவர் இயக்கத்தில் நடிக்க உள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... மாட்டிவிட்டுட்டியே பங்கு... நடிகர் தனுஷுக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தை அமபலப்படுத்திய ரோபோ சங்கர்