வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாத பாஜக நாட்டையும், நாட்டு மக்களையும் பிளவுப்படுத்துகிறது. இந்திய ஜனநாயகம் காப்பாற்ற வேண்டும். மத்தியில் சர்வாதிகார ஆட்சியை அடக்கி முற்றுப்புள்ளி வைப்போம். ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது? என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

10:01 PM (IST) Aug 27
'ரமணா' பட பாணியில் மத்திய அரசு ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்
10:01 PM (IST) Aug 27
கூடங்குளம் அணு உலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்
09:06 PM (IST) Aug 27
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கூடவுள்ள இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
08:41 PM (IST) Aug 27
திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாலையில் தொழிலாளர்கள் வேலையை முடித்து சென்ற பின்பு இந்த தீ விபத்து நடந்திருப்பதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், பல கோடி மதிப்பிலான பின்னலாடைகள் மற்றும் மூலப் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
08:32 PM (IST) Aug 27
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ள இந்திய ஆடவர் 4 x 400 தொடர் ஓட்ட அணியினரைப் போற்றுகிறேன். ஆசிய அளவிலான புதிய சாதனையைப் படைத்து, ஓட்டப்பந்தயத்தில பல முன்னணி நாடுகளை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நமது அணியினர் நுழைந்துள்ளனர். இதற்காக, முகம்மது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகம்மது அஜ்மல் மற்றும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரான ராஜேஷ் ரமேஷ் ஆகிய நால்வருக்கும் அவர்களது அபாரமான ஓட்டத்துக்காகப் பாராட்டுகள்.
08:24 PM (IST) Aug 27
காட்டுமன்னார்கோயிலில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணிக்காக தோண்டபட்ட குழியில், 5-க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள் கண்டெடுப்பு
08:23 PM (IST) Aug 27
உள்நாட்டு விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், போதிய இருப்பை பராமரிக்கவும், புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீதம் வரி விதித்துள்ளது
08:22 PM (IST) Aug 27
தமிழ்நாட்டிட் ல் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
08:21 PM (IST) Aug 27
இந்திய கடற்படையில் தற்போது 4 உதவி போர்க்கப்பல்கள் மட்டுமே உள்ள நிலையில் மேலும் 5 கப்பல்கள் தயாரிக்க மத்திய அரசு ரூ.19,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த போர்க்கப்பல்கள் உள்நாட்டிலேயே பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட உள்ளன.
08:09 PM (IST) Aug 27
இனி வரக்கூடிய காலங்களில், யாருக்கும் சால்வை போன்றவைகளை அணிவிக்காமல் புத்தகங்களை வழங்குங்கள். விளம்பர பதாகைகள் வைக்காதீர்கள். பட்டாசு வெடிக்காதீர்கள் என புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
08:08 PM (IST) Aug 27
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வயதான தாயை அவரது மகன் கொடூரமாக தெருவில் இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
05:59 PM (IST) Aug 27
சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி முனை என பெயரிட்டதில் எந்த சர்ச்சையும் இல்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்
05:19 PM (IST) Aug 27
நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை சந்திரயான்3 ஆய்வு செய்து வரும் புதிய அப்டேட்டை இஸ்ரோ வழங்கியுள்ளது
05:19 PM (IST) Aug 27
நீல நிற மூடி கொண்ட பேனாவின் தயாரிப்பை நிறுத்தப்போவதாக வெளியான தகவல் குறித்து பேனா தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளது
04:36 PM (IST) Aug 27
நெட்ஃபிளிக்ஸ் ஜியோவுடன் 84 நாட்களுக்கு இலவசமாகக் கிடைக்கும், அத்துடன் டேட்டா-அழைப்பு-செய்தி போன்ற பலன்களும் கிடைக்கும்.
04:11 PM (IST) Aug 27
சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் தாக்கிய சம்பவத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
03:45 PM (IST) Aug 27
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள அடியே திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 2 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.
02:58 PM (IST) Aug 27
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோவை பதிவிட்டு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
02:25 PM (IST) Aug 27
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 39வது எபிசோட்.
12:25 PM (IST) Aug 27
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தங்கள் மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
12:17 PM (IST) Aug 27
தாலி கட்டிய கணவனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12:09 PM (IST) Aug 27
மோட்டோ ஜி84 (Moto G84 5G) இந்தியாவில் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 11X மற்றும் Redmi 12 5G உடன் போட்டியிட மோட்டோரோலா மிகவும் சிக்கனமான 5G ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது.
11:39 AM (IST) Aug 27
யூடியூபர் இனியன், சீரியல் நடிகை ஜனனி பிரதீப் ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில், திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
11:22 AM (IST) Aug 27
எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவின் கூட்டம் மும்பையில் நடக்கிறது. முன்னதாக அசோக் கஹ்லோட் மற்றும் பூபேஷ் பாகேல் ஆகியோர் ராகுல் காந்தியை பிரதமரின் முகம் என்று அழைத்தனர்.
11:22 AM (IST) Aug 27
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை ஆந்திர அரசு நியமித்துள்ளது.
10:58 AM (IST) Aug 27
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு, ஆறு வாரத்திற்கு முன்பே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.
10:42 AM (IST) Aug 27
வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாத பாஜக நாட்டையும், நாட்டு மக்களையும் பிளவுப்படுத்துகிறது. இந்திய ஜனநாயகம் காப்பாற்ற வேண்டும். மத்தியில் சர்வாதிகார ஆட்சியை அடக்கி முற்றுப்புள்ளி வைப்போம். ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது? என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
10:21 AM (IST) Aug 27
இந்த 3 வங்கிகளும் எஃப்டிக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. இங்கு 8%க்கும் அதிகமான வட்டி கிடைக்கும். அந்த திட்டங்களை காண்போம்.
10:03 AM (IST) Aug 27
சந்தானம் நடித்த கிக் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றபோது, நடிகர் சந்தானத்திடம், உதயநிதி உடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட ஆசை உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது.
09:59 AM (IST) Aug 27
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:43 AM (IST) Aug 27
இந்த ஜியோ திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா கிடைக்கும். அது என்னென்ன திட்டங்கள் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
09:39 AM (IST) Aug 27
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா நடைபெறுவதையொட்டி சென்னையில் அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்தும் வாகன நிறுத்தும் இடங்கள் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
09:29 AM (IST) Aug 27
மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை மனைவி வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
09:10 AM (IST) Aug 27
மதுரையில் நேற்று தீ விபத்துக்கு உள்ளான ரயிலில், நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் சிறிய அளவில் தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயை அணைத்தனர்.
09:09 AM (IST) Aug 27
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் இரவு முழுவதும் இடி மின்னலோடு மழை பெய்ய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
09:08 AM (IST) Aug 27
மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 வடமாநில சுற்றுலா பயணிகள் இறந்த நிலையில், அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மதுரையில் இருந்த சென்னை கொண்டு வரப்பட்டது. விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படவுள்ளது.
08:51 AM (IST) Aug 27
சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
08:12 AM (IST) Aug 27
ஈரோட்டில் ஆசிரியைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு ஆசிரியரின் கணவரான கார் ஓட்டுநரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
07:53 AM (IST) Aug 27
மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மதுரையில் இருந்து 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. விமானம் மூலம் லக்னோ கெண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
07:24 AM (IST) Aug 27
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.