பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த ராமதாஸ்..!
பாமக கவுரவ தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.கே.மணி கடந்த சில நாட்களாக தொண்டை வலி, தலைவலி, தலைசுற்றல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பாமக கவுரவ தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.கே.மணி கடந்த சில நாட்களாக தொண்டை வலி, தலைவலி, தலைசுற்றல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் தொண்டை குரல் வளையில் இருக்கும் கட்டியை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க;- மண்ணுக்கு துரோகம் செய்த எட்டப்பன்.. துரோக வரலாற்றின் கூடாரமே திமுக தான்! பன்னீருக்கு ஜி.கே.மணி பதிலடி..!
இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.
இதையும் படிங்க;- கஞ்சா போதையில் காவலரையே துரத்தும் அளவுக்கு நிலைமை மோசமா இருக்கு!முதல்வரே சர்வாதிகாரியாக மாறுங்கள்! அன்புமணி.!
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.