ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை.. மற்றொரு ஆசிரியை கணவர் பகீர் தகவல்.. நடந்தது என்ன?
ஈரோட்டில் ஆசிரியைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு ஆசிரியரின் கணவரான கார் ஓட்டுநரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (53). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. தினமும் காலை எழுந்த உடன் மனோகரன் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதேபோல், கடந்த 20ம் தேதி மனோகரன் நடை பயிற்சிக்காக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மனைவி புவனேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து கணவர் அதிர்ச்சியடைந்தார்.
Crime news
புவனேஸ்வரி அணிந்திருந்த நகைகள் மாயமான நிலையில் வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்படவில்லை. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். புவனேஸ்வரி வீட்டின் மேல் மாடியில் வாடகைக்குக் குடியிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் பல்ராமிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்ராமுடன் பணியாற்றும் ஆசிரியையின் கணவரான பெரியசடையம்பாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயக்குமார் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்! எவ்வளவு சொல்லியும் கேட்காத புருஷன்! அர்ச்சகருக்கு நடந்த ரத்த அபிஷேகம்! நடந்தது என்ன?
இதுகுறித்து போலீசார் கூறுகையில்;- ஆசிரியை புவனேஸ்வரியின் வீட்டின் மேல் பகுதியில் பல்ராம் என்ற ஆசிரியர் வாடகைக்கு குடியிருந்துள்ளார். இவரது மனைவியும், கார் ஓட்டுநரான ஜெயக்குமாரின் மனைவியும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் பல்ராமுக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததால் ஜெயக்குமார் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது ஆசிரியை புவனேஸ்வரியிடம் அதிக அளவு நகை, பணம் இருப்பதை அறிந்து கொண்ட ஜெயகுமார், புவனேஸ்வரியின் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று மனோகரன் நடை பயிற்சிக்கு வெளியில் சென்ற நிலையில் வீட்டிற்குள் நுழைந்த ஜெயக்குமார், படுக்கை அறையில் இருந்த அலமாரியை திறக்க முயன்றுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த புவனேஸ்வரி சத்தம் கேட்டு எழுந்த நிலையில் ஜெயக்குமாரை கண்டு கூச்சலிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- இரவு முழுவதும் உல்லாசம்.. அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி.!
இதனால் வெளியில் சொல்லி விடுவாரரோ என்று பயந்து போய் ஆசிரியை புவனேஸ்வரியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலைச் செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை திருடி சென்றது தெரியவந்துள்ளது. ஜெயக்குமாரிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான ஜெயக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.