MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • இரவு முழுவதும் உல்லாசம்.. அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி.!

இரவு முழுவதும் உல்லாசம்.. அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி.!

இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துவிட்டு அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Aug 25 2023, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வந்தவர் நந்தகுமார் (32). இவர்  கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவருடைய மனைவி ஜெயசித்ரா (47). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நந்தகுமாருக்கும், ஜெயசித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

24

நாளடைவில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதை கைவிடும் படி கூறி வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இரு குடும்பத்தார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததால்  கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவு எடுத்தனர். 

34
suicide

suicide

அதன்படி நேற்று முன்தினம் இரவு நந்தகுமார், ஜெயசித்ராவை தனது வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர், அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். நீண்ட நேரமாகியும் நந்தகுமார் வீடு திறக்கப்பட்டாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

44

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
Recommended image2
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image3
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved