கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:51 PM (IST) Nov 23
அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
07:17 PM (IST) Nov 23
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் எனும் மக்கள் குறை கேட்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது
06:52 PM (IST) Nov 23
கனரக இயந்திரங்களின் உள்நாட்டு உற்பத்திக்கான உயர்மட்டக் குழு நிலக்கரி அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது
06:27 PM (IST) Nov 23
பாஜகவை சேர்ந்த 95 வயது நிர்வாகியை பிரதமர் மோடி அங்கீகரித்தது அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது
05:07 PM (IST) Nov 23
மனிதர்களின் பணிச்சுமையை செயற்கை நுண்ணறிவு குறைப்பதால், அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என கோடீஸ்வர தொழிலதிபர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்
04:34 PM (IST) Nov 23
விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது
04:15 PM (IST) Nov 23
தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய வழிகாட்டுதலின்படி, உயிரியல் படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேர முடியும்
03:35 PM (IST) Nov 23
இந்தியன் 2 படப்பிடிப்பும், தலைவர் 170 பட ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடந்தபோது நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சந்தித்துக் கொண்டனர்.
02:55 PM (IST) Nov 23
பாஜக 15 இடங்களை தாண்டி வெற்றி பெறுவார்களா என்று பார்ப்போம் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கடுமையாக தாக்கியுள்ளார்
02:54 PM (IST) Nov 23
டீப் ஃபேக்குகள் ஜனநாயகத்திற்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்
02:54 PM (IST) Nov 23
உத்தரகாண்ட் சுரங்கத்தினுள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்க 15 மணி நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
02:33 PM (IST) Nov 23
சர்வதேச திரைப்பட விழாவுக்காக கோவா சென்றுள்ள நடிகர் விஜய் சேதுபதி, அங்கு போட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
01:24 PM (IST) Nov 23
இளையராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் தனுஷுடன் நடிகர் சிம்புவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12:59 PM (IST) Nov 23
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றவர் பாத்திமா பீவி என்பது குறிப்பிடத்தக்கது.
12:40 PM (IST) Nov 23
நடிகை விசித்ரா 2001-ம் ஆண்டு பாலியல் புகார் அளித்தபோது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் ஆக்ஷன் எடுக்காதது பற்றி விசித்ராவின் கணவர் விளக்கம் அளித்துள்ளார்.
12:03 PM (IST) Nov 23
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண அனுமதி சீட்டுகளை பெறுவதற்கான நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
11:31 AM (IST) Nov 23
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 திரைப்படத்தின் மூன்று அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
11:15 AM (IST) Nov 23
விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவு ஆனதாக சர்ச்சை எழுந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
10:23 AM (IST) Nov 23
விஜய் டிவி சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீதேவி தான் மீண்டும் கர்ப்பமாக உள்ளதை அறிவித்துள்ளார்.
09:54 AM (IST) Nov 23
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:42 AM (IST) Nov 23
தெலுங்கு திரையுலகில் தனக்கும் பாலியல் சீண்டல் நடந்துள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே கூறி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
09:27 AM (IST) Nov 23
மக்களுக்கு அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
09:07 AM (IST) Nov 23
திருநெல்வேலியில் 3 திமுக கவுன்சிலர்கள், ஒரு திமுக பிரதிநிதி என மொத்தம் 4 பேர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
08:44 AM (IST) Nov 23
சேரி மொழி என பதிவிட்டதால் சர்ச்சை கிளம்பிய நிலையில், அதற்கு குஷ்பு கொடுத்த விளக்கத்தால் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
08:23 AM (IST) Nov 23
அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் எதிர்வரும் 23.11.2023 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் அன்றைய தினம் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
07:25 AM (IST) Nov 23
பச்சை நிற பாக்கெட் பாலை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஊதா நிற பாக்கெட் பாலை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
07:25 AM (IST) Nov 23
தொடர் கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.