நீ இளையராஜா-னா நான் ஏ.ஆர்.ரகுமான்! தனுஷுக்கு போட்டியாக பயோபிக்கில் இறங்கும் சிம்பு? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
இளையராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் தனுஷுடன் நடிகர் சிம்புவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Simbu, dhanush
பயோபிக் படங்களுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில் தற்போது தமிழில் இசைஞானி இளையராஜாவின் பயோபிக் உருவாகி வருகிறது. இப்படத்தில் இசைஞானி இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஷூட்டிங்கையும் தொடங்க உள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
Dhanush, Ilaiyaraaja
தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆத்மார்த்தமான இசையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் இளையராஜா, சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இன்றளவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது இசையை போல் இவரது வாழ்க்கையில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களை கொண்டது. அதில் முக்கியமான நிகழ்வுகளை தொகுத்து தான் இந்த பயோபிக் திரைப்படம் உருவாக உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Simbu, AR Rahman
இளையராஜாவுக்கு நிகராக தமிழ்நாட்டில் பெயரும் புகழும் பெற்ற மற்றொரு இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் தான். இவரும் இசையமைப்பாளராக அறிமுகமாகும் முன்னர் இளையராஜாவிடம் தான் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் நாளடைவில் இருவரும் போட்டியாளர்களாக மாறி போட்டிபோட்டு ஹிட் பாடல்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.
Simbu Dhanush act together
இளையராஜாவின் பயோபிக்கிலும் ஏ.ஆர்.ரகுமான் குறித்த காட்சிகள் சில இடம்பெற உள்ளதாம். அந்த காட்சியில் தனுஷுக்கு நிகரான முன்னணி நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்த படக்குழு, நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இந்த கூட்டணி மட்டும் உறுதியானால், தனுஷும், சிம்புவும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... என் மகள் அக்கா ஆகப்போறா! மீண்டும் கர்ப்பம்... 2-வது குழந்தை பிறக்க உள்ளதை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகை