என் மகள் அக்கா ஆகப்போறா! மீண்டும் கர்ப்பம்... 2-வது குழந்தை பிறக்க உள்ளதை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீதேவி தான் மீண்டும் கர்ப்பமாக உள்ளதை அறிவித்துள்ளார்.
sridevi ashok
தனுஷ் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்த அவர், சினிமா செட் ஆகாததால், அப்படியே சின்னத்திரை பக்கம் ஒதுங்கி சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
serial actress sridevi ashok
சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, தங்கம், இளவரசி, கஸ்தூரி போன்ற சீரியல்களில் நடித்த ஸ்ரீதேவிக்கு திருப்புமுனையாக அமைந்தது விஜய் டிவி தொடர்கள் தான். விஜய் டிவியில் இவர் முதன்முதலில் நடித்த சீரியல் பிரிவோம் சந்திப்போம். இந்த தொடரில் சங்கீதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரீதேவி.
sridevi ashok pregnant
பின்னர் பிரியா பவானி சங்கருடன் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்த ஸ்ரீதேவிக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்று தந்தது ராஜா ராணி சீரியல் தான். ஆலியா மானசா - சஞ்சீவ் ஜோடியாக நடித்து ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் முதல் சீசனில் ஸ்ரீதேவி வில்லியாக நடித்து கவனம் பெற்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
sridevi ashok with her husband
ராஜா ராணி சீரியலில் நடித்தபோதே நடிகை ஸ்ரீதேவிக்கு திருமணம் ஆனது. அவர் அசோகா சிண்டாலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு சித்தாரா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. முதல் குழந்தை பிறந்த பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறிய ஸ்ரீதேவி, மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
sridevi ashok 2nd pregnancy
அதன்படி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி மற்றும் மோதலும் காதலும் ஆகிய இரண்டு தொடர்களிலும் நடித்து வரும் ஸ்ரீதேவி, தான் தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை அறிவிக்கும் விதமாக தனது மகள் மற்றும் கணவருடன் போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார் ஸ்ரீதேவி.
sridevi ashok family
நான் அக்கா ஆகப்போகிறேன் என்கிற வாசகம் அடங்கிய டீ சர்ட்டை தன் மகளுக்கு மாட்டிவிட்டு ஸ்ரீதேவி நடத்தி இருக்கும் இந்த கியூட்டான போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் ஸ்ரீதேவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... குவியும் பாலியல் புகார்... சிக்கலில் பாலகிருஷ்ணா? விசித்ராவை போல் கசப்பான அனுபவங்களை பகிர்ந்த ராதிகா ஆப்தே