திமுக கவுன்சிலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?
திருநெல்வேலியில் 3 திமுக கவுன்சிலர்கள், ஒரு திமுக பிரதிநிதி என மொத்தம் 4 பேர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில், 51 உறுப்பினர்கள் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மேயர் பி.எம். சரவணன் நிறை வேற்றி தருவதில்லை என ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மாநகராட்சி கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே போராட்டத்தில் ஈடுபடுவது, ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது என தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது திமுக மேயருக்கு எதிராக முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தில் 3 திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஒரு திமுக பிரதிநிதி ஈடுபட்டனர். இந்நிலையில், 3 திமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்ககப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- DMK: திமுகவில் இருந்து முக்கிய பிரமுகர் அதிரடி நீக்கம்..! என்ன காரணம் தெரியுமா?
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7வது வார்டைச் சேர்ந்த மாநகர பிரதிநிதி ஆர். மணி (௭) சுண்ணாம்பு மணி ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.