- Home
- Gallery
- Today Gold Rate in Chennai : பொதுமக்களை அலறவிடும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
Today Gold Rate in Chennai : பொதுமக்களை அலறவிடும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரன் 45,840க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.5,730க்கு விற்பனையானது.
இன்றைய (நவம்பர் 23) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.45,920-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,740ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,210ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,680ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.79.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.