என் நண்பனை பார்க்க நானே வர்றேன்! ஒரே இடத்தில் ஷூட்டிங்.. நண்பன் ரஜினியை பார்க்க ஓடோடி வந்த கமல் - போட்டோஸ் இதோ
இந்தியன் 2 படப்பிடிப்பும், தலைவர் 170 பட ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடந்தபோது நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சந்தித்துக் கொண்டனர்.
kamalhaasan, Rajinikanth
லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தயாராகும் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர் .
kamal, Rajini
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகெங்கும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “இந்தியன் 2” லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
kamalhaasan meet Rajinikanth
உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனையறிந்த உலகநாயகன் கமல்ஹாசன் “என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்” என காலை 8 மணிக்கே உடனடியாக தலைவர் 170 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்து, சூப்பர்ஸ்டாருக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனைக் கண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.
kamalhaasan, Rajinikanth friendship
இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அவர்களுக்கிடையேயான அன்பும், படப்பிடிப்பில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்கள் இதே இடத்தில் ஷூட்டிங் நடைபெற்ற போது, இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில். சந்தித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... மத்திய இணை அமைச்சருடன் சேர்ந்து கப்பல் ஓட்டி... கோவாவில் சில் பண்ணும் விஜய் சேதுபதி