சேரி மொழிக்கு அர்த்தம் இதுதான்... குஷ்பு கொடுத்த குண்டக்க மண்டக்க விளக்கத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
சேரி மொழி என எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு குஷ்பு கொடுத்த விளக்கத்தால் நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு அண்மையில் நடிகை திரிஷா பற்றி மன்சூர் அலிகான் அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, தேசிய மகளிர் ஆணையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்து உடனடி நடவடிக்கையும் எடுத்தார். இதையடுத்து, திரிஷா விவகாரத்தில் இவ்வளவு அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கும் நீங்கள் ஏன் மணிப்பூரில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தீர்கள் என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த குஷ்பு, உங்களைப்போல சேரி மொழியில் என்னால் பேச முடியாது. என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கண்விழித்து பாருங்க என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவில் நடிகை குஷ்பு சேரி மொழி என பயன்படுத்தி இருந்தது சர்ச்சையில் சிக்கியது. அவர் அவ்வாறு பதிவிட்டதற்கு கண்டனங்களும் குவிந்தன. இதற்காக நடிகை குஷ்பு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என காயத்ரி ரகுராம் வலியுறுத்தி இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சேரி மொழி விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், அதற்கு நடிகை குஷ்பு கொடுத்துள்ள விளக்கத்தை பார்த்து பலரும் கொந்தளித்துள்ளனர். அவர் விளக்கம் அளித்து போட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த எதிர்ப்புகளை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. நான் கிண்டலுடன் பதிவிட்ட பதிவு அது. சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் நேசிப்பவர் என்று அர்த்தம்.
நான் அன்பை பகிர்ந்துகொள்வதாக கிண்டலாக சொல்வதற்காக அந்த வார்த்தையை பதிவிட்டு இருந்தேன். நான் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன் நிற்பவள் என விளக்கம் அளித்துள்ளார் குஷ்பு. அவரின் இந்த குண்டக்க மண்டக்க விளக்கத்தை கேட்டு கொந்தளித்த நெட்டிசன்கள் அது முட்டாள்தனமாக இருப்பதாக சாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சீனு ராமசாமி செய்த டார்ச்சர்! திரையுலகை விட்டே ஓடி போன இளம் நடிகை யார் தெரியுமா? பகீர் கிளப்பிய பத்திரிகையாளர்