Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கு: மியாட் மருத்துவமனை அறிக்கை!

விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது

Miot hospital statement about dmdk vijayakanth health condition smp
Author
First Published Nov 23, 2023, 4:32 PM IST | Last Updated Nov 23, 2023, 4:32 PM IST

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

இதனால், தேமுதிகவின் அரசியல் நடவடிக்கைகளை அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனன் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரே கவனித்து வருகின்றனர். ஆனாலும், விஜயகாந்த் ஆக்டிவாக இல்லாதது அக்கட்சியினரை வருத்ததிலேயே ஆழ்த்தியுள்ளது.

உயிரியல் படிக்கவில்லை என்றாலும் மருத்துவராகலாம்: புதிய வழிகாட்டுதல்!

அதேசமயம், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவ்வப்போது வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளையும் விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே,  கடந்த சில நாட்களாக விஜயகாந்த் தொடர் இருமல், காய்ச்சல், சளி, தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக  கடந்த 18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Miot hospital statement about dmdk vijayakanth health condition smp

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விஜயகாந்த் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது என தெரிவித்துள்ள மியாட் மருத்துவமனை, இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios