தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும் என பாநாயகர் கூறியுள்ளார்.

11:59 PM (IST) Sep 20
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தங்கம் போன்ற பழுப்பு நிற சேலையில் அசத்தலான போட்டோக்களை தற்போது ரிலீஸ் செய்துள்ளார்.
10:55 PM (IST) Sep 20
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் போது, ராகுல் காந்தி மசோதாவுக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அதே நேரத்தில் ஓபிசி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசாங்கத்துக்கு எதிராக பேசினார்.
10:34 PM (IST) Sep 20
மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவான நாரி சக்தி வந்தன் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நிறைவேற்றப்படும் முதல் மசோதா இதுவாகும்.
10:20 PM (IST) Sep 20
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
09:52 PM (IST) Sep 20
சமீபத்தில் AI வைரல் புகைப்படங்கள் உருவாக்கி வருகிறது. இது உண்மையிலேயே மக்களுக்கு நன்மையை தருகிறதா ? என்பதை பார்க்கலாம்.
09:14 PM (IST) Sep 20
விகடனும் கலைஞரும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பத்திரிகைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்
08:32 PM (IST) Sep 20
மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்
07:57 PM (IST) Sep 20
பான் கார்டு வைத்திருக்கும் பலருக்கும் டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது எப்படி என்று தெரியவில்லைல். பான் கார்டின் நகல் எவ்வாறு பெற வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
07:32 PM (IST) Sep 20
ஆந்திர மாநிலத்தின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்
07:20 PM (IST) Sep 20
உத்தரபிரதேசம் கான்பூரில் 5 வயது சிறுமியை 7 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
07:13 PM (IST) Sep 20
கட்டுமானத்தில் உள்ள பிளாட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன
06:59 PM (IST) Sep 20
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
05:48 PM (IST) Sep 20
இபிஎப்ஓ தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
05:21 PM (IST) Sep 20
ரயில் டிக்கெட்டைப் பெற்ற பிறகும் பயணிகள் அபராதம் செலுத்த வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் இந்த தனித்துவமான விதி உங்களுக்கு தெரியுமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
04:55 PM (IST) Sep 20
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான கனிமொழி எம்.பி.யின் பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
04:42 PM (IST) Sep 20
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
04:16 PM (IST) Sep 20
கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
04:15 PM (IST) Sep 20
கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
04:14 PM (IST) Sep 20
காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களின் நலன்களில் சமரசம் செய்யப்படுவதை பாஜகவும் நானும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
04:14 PM (IST) Sep 20
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
03:35 PM (IST) Sep 20
ம்கிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்தில் இருந்து பிரபல வில்லன் நடிகர் விலகி உள்ளதால் அவருக்கு பதில் பிக்பாஸ் பிரபலம் கமிட் ஆகி உள்ளார்.
02:28 PM (IST) Sep 20
விஜய் ஆண்டனி மகள் மீராவின் தற்கொலை திரையுலகை உலுக்கி உள்ள நிலையில், இதற்கு முன் நிகழ்ந்த எதிர்பாரா மரணங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:57 PM (IST) Sep 20
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும் என பாநாயகர் கூறியுள்ளார்.
01:45 PM (IST) Sep 20
பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
01:40 PM (IST) Sep 20
மகள் மறைவுக்கு பின்னர்... விஜய் ஆண்டனி பல மணி நேரமாக, ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை என பிரபல தயாரிப்பாளர் தனஜெயன் X தளத்தில் போட்டுள்ள பதிவு, ரசிகர்கள் மனதை கலங்க வைத்துள்ளது. மேலும் படிக்க
01:36 PM (IST) Sep 20
தலித் முதியவரின் தலையில் காலணி மூட்டையை வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
12:33 PM (IST) Sep 20
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
11:47 AM (IST) Sep 20
அஜித்தின் 62வது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் திடீரென அதிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
10:51 AM (IST) Sep 20
யூடியூபர் டியூடு விக்கி இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் பூஜையில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
10:19 AM (IST) Sep 20
ஜவான் படத்தின் விழாக்களில் கலந்துகொள்ள மறுத்த நடிகை நயன்தாரா, தற்போது அம்பானி வீட்டு விழாவில் கலந்துகொண்டது பேசுபொருள் ஆகி உள்ளது.
08:43 AM (IST) Sep 20
சென்னையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த இரண்டு பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
08:10 AM (IST) Sep 20
திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. இதுவரை 6 சிறுத்தைகள் சிக்கியுள்ளது.
08:06 AM (IST) Sep 20
சென்னை மற்றும் புறநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
07:20 AM (IST) Sep 20
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
07:19 AM (IST) Sep 20
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
07:18 AM (IST) Sep 20
நியூசிலாந்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது.