இதுக்குமேல வெயிட் பண்ண முடியாது... பொறுமை இழந்து விடாமுயற்சியில் இருந்து விலகிய பிரபல வில்லன் நடிகர்
ம்கிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்தில் இருந்து பிரபல வில்லன் நடிகர் விலகி உள்ளதால் அவருக்கு பதில் பிக்பாஸ் பிரபலம் கமிட் ஆகி உள்ளார்.
vidamuyarchi
தடையறத் தாக்க, தடம், மீகாமன் போன்ற தரமான திரில்லர் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் மகிழ் திருமேனி. கடைசியாக உதயநிதியின் கலகத் தலைவன் படத்தை இயக்கிய அவருக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
Ajith, Magizh thirumeni
விடாமுயற்சி படம் குறித்த அறிவிப்பு கடந்த மே மாதம் வெளிவந்தது. இருப்பினும் அதன் பின் 4 மாதங்கள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கியபாடில்லை. வலிமை அப்டேட்டுக்கு ஏங்கியதை போல் தற்போது விடாமுயற்சி அப்டேட்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக அவ்வபோது விடாமுயற்சி படம் குறித்த சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... லோகேஷ், அட்லியவே மிஞ்சிடுவாரு போல.. லியோ போஸ்டர் இந்த படங்களின் காப்பியா? வைரல் மீம்ஸ்..
Ajith Trisha
அந்த வகையில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அதேபோல் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கமிட் ஆகி உள்ளார். அண்மையில் அவருடன் எடுத்த புகைப்படத்தின் மூலம் அஜித்தே அதனை சூசகமாக அறிவித்துவிட்டார். அதேபோல் இப்படத்தில் மற்றுமொரு வில்லனாக கைதி, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.
Arav, Arjun das
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஆகி வருவதால் தற்போது அர்ஜுன் தாஸ் இப்படத்தில் இருந்து விலகி உள்ளாராம். அவருக்கு பதிலாக பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ்வை வில்லனாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். நடிகர் ஆரவ் ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது விடாமுயற்சி மூலம் மீண்டும் இணைந்துள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அபுதாபியில் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்... Cool Suresh: 'சரக்கு' பட விழாவில் தொகுப்பாளரிடம் அத்து மீறிய கூல் சுரேஷ்! கண்டித்த பத்திரிக்கையாளர்கள்!