Asianet News TamilAsianet News Tamil

“ என்ன தலைவா நீயே இப்படி பண்ணிட்ட..” லியோ போஸ்டர் காப்பி சர்ச்சையில் சிக்கிய லோகெஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான லியோ குறித்து அவ்வப்போது பல அப்டேட்களையும் படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர்.

Is leo movie latest posters copied from these movies netizens troll Rya
Author
First Published Sep 20, 2023, 3:10 PM IST

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ்  கூட்டணியில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் என நடிகர் பட்டாளமே இணைந்துள்ளனர். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான லியோ குறித்து அவ்வப்போது பல அப்டேட்களையும் படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது படத்தின் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டு வருகிறது.

'உலகம் சுற்றும் வாலிபன்' ஜெயலலிதா நடிக்க வேண்டிய படம்.. எம்.ஜி.ஆர் முடிவை மாற்றியது ஏன் தெரியுமா?

இந்த நிலையில் லியோ படத்தின் புதிய போஸ்டர்களை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த போஸ்டர்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கண்டறிந்த நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இளம் இயக்குனர் பலரும், கதைகளையும், காட்சிகளையும் வேறு மொழியில் இருந்து அப்படியே காப்பி செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அந்த வகையில் ஏ.ஆர். முருகதாஸ், அட்லீ என பல இயக்குனர்கள் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளனர். இந்த நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அந்த சர்ச்சையில் சிக்கி உள்ளார். அப்படி காப்பி அடிக்கப்பட்ட படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

Cold Pursuit என்ற படத்தின் போஸ்டரை போலவே விஜய்யின் லியோ படத்தின் போஸ்டரும் உள்ளது. அதே போல் லியோ படத்தின் மற்றொரு போஸ்டர் ஆயுதம் என்ற படத்தின் போஸ்டரை போலவே உள்ளது. இந்த போட்ட்களை பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், அட்லீயை விட லோகேஷ் பெரிய ஆளா இருக்காரே என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதனிடையே ‘A History of Violence’ என்ற படத்தின் தழுவலே லியோ படம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios