'உலகம் சுற்றும் வாலிபன்' ஜெயலலிதா நடிக்க வேண்டிய படம்.. எம்.ஜி.ஆர் முடிவை மாற்றியது ஏன் தெரியுமா?
1965 – 1973-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்து 28 பாக்ஸ் ஆபீஸ் படங்களை கொடுத்து வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும், வெண்ணிற ஆடை மூலம் தமிழ் திரையுலில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெயலலிதா.. பின்னர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிசியாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் ஜெயலிதா. குறிப்பாக எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 1965 – 1973-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்து 28 பாக்ஸ் ஆபீஸ் படங்களை கொடுத்து வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தார்.
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. மறுபுறம் சரோஜா தேவி உள்ளிட்ட பல நடிகைகளுடன் எம்.ஜி.ஆர் நடித்து வந்தாலும், ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் மட்டுமே நடித்து வந்தார். இந்த சூழலில் சில பிரச்சனைகளால் ஜெயலலிதாவுடன் நடிப்பதை எம்.ஜி.ஆர் தவிர்க்க நினைத்தார்.
அப்போது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தனது சொந்த படத்தை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தார். ஜப்பான், மலேசியா, ஹாங்காக் உள்ளிட்ட சில நாடுகளில் எடுக்க திட்டமிட்டிருந்தார். அந்த படத்தில் ஜெயலலிதாவை நடிக்க வைக்கவே எம்.ஜி.ஆர் முதலில் முடிவு செய்தார்.
ஆனால் இந்த படத்தில் ஜெயலலிதாவுக்கு பதில் மஞ்சுளாவை நடிக்க வைத்தார். அதற்கு காரணமானவர் எம்.ஜி.ஆரின் வலது கையாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் தான். ஆம். அவர் தான் எம்.ஜி.ஆருக்கு அந்த ஆலோசனையை வழங்கி உள்ளார். படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர் வெளிநாடு செல்லவில்லை, ஜெயலலிதா உடன் ஊர் சுற்றவே வெளிநாடு போகிறீர்கள் என்று நவசக்தி எழுதி உள்ளது என்று அந்த பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் காட்டினார்.
உடனே என்ன செய்யலாம் என்று எம்.ஜி.ஆர் கேட்க, இந்த படத்தில் ஜெயலலிதா வேண்டாம், அவருக்கு மஞ்சுளாவை நடிக்க வைக்கலாம் என்று ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜெயலிதாவை நீக்கிவிட்டு, மஞ்சுளாவை நடிக்க வைத்தார்.
மறுபுறம் இதனால் கோபமான ஜெயலலிதா, இனிமே எம்.ஜி.ஆருடன் நடிக்கமாட்டேன். என்று முடிவெடுத்தார். மேலும் எமி.ஜி.ஆரை கோபப்படுத்த சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலருடன் நடிக்க தொடங்கினார்.