மஞ்சுளாவின் கவர்ச்சியால் மயங்கிப்போன MGR.. 70களில் காவாலா டான்ஸ் ஆடி கவர்ச்சியை அள்ளித்தெளித்த டாப் 5 நடிகைகள்
1970-களில் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஆட்டம்போட்டு தமிழ் சினிமாவில் கிளாமர் குயினாக கலக்கிய நடிகைகளைப் பற்றி பார்க்கலாம்.
70s glamour actress
1970, 80 களில் கவர்ச்சிக்கென தனி நடிகைகள் இருந்து வந்தனர். அப்படி கவர்ச்சி நடனம் ஆடி பேமஸ் ஆனவர்கள் ஏராளம். உதாரணத்துக்கு மஞ்சுளா, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும். பின்னர் நாளடைவில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகளே கவர்ச்சி நடனம் ஆடத் தொடங்கியதால், கிளாமர் நடிகைகளுக்கான மவுசு குறைந்துவிட்டது. அப்படி 1970-களில் தமிழ் சினிமாவில் கிளாமர் குயினாக கலக்கிய நடிகைகளைப் பற்றி பார்க்கலாம்.
ஷோபா
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷோபா. தட்டுங்கள் திறக்கட்டும் என்கிற படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின்னர் பசி என்கிற படத்தில் திறம்பட நடித்து தேசிய விருதையும் வென்றார். அப்போது அவருக்கு வெறும் 17 வயது தான். பின்னர் படிப்படியாக கவர்ச்சி ரூட்டுக்கு தாவிய நடிகை ஷோபா, 1970-களில் சில்க் ஸ்மிதாவை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி காட்டி முன்னணி நடிகைகளை மிரள வைத்தார்.
மஞ்சுளா
தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மஞ்சுளா. 1969ல் வெளிவந்த சாந்தி நிலையம் படத்தில் துணை நடிகையாக நடித்த மஞ்சுளா, பின்னர் தன் நடிப்புத் திறமையால் 1971-ம் ஆண்டு ரிக்ஷாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை தட்டி தூக்கினார். எம்.ஜி.ஆரோடு ஓவர் நெருக்கமாகவும், அவர் படங்களில் சற்று தூக்கலான கவர்ச்சியாகவும் நடித்த காரணத்தால் அவருக்கு அடுத்தடுத்து இதயக்கனி, நேற்று இன்று நாளை, உலகம் சுற்றும் வாலிபன், நினைத்ததை முடிப்பவன் என 5 பட வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் அளித்தார். மஞ்சுளா காட்டிய நெருக்கம் தான் இதற்கு காரணம் என அந்த சமயத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... மீண்டும் குணசேகரன் வருவான் ஆனா.. அதிர்ச்சி கொடுத்த அப்பத்தா! வில்லியாக மாறிய விசாலாட்சி! எதிர்நீச்சல் அப்டேட்!
ஜெயசித்ரா
ஆந்திராவை பூர்விகமாக கொண்ட நடிகை ஜெயசித்ரா, தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தார். மகன் படம் மூலம் அறிமுகமான ஜெயசித்ராவுக்கு அங்கீகாரத்தை பெற்றுத்தந்த படம் என்றால் அது கே.பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம் தான். இதையடுத்து சிவாஜி, கமல்ஹாசன் என பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் தன்னுடைய கவர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் ஜெயசித்ரா.
வைஜெயந்தி மாலா
70களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் தான் வைஜெயந்தி மாலா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய இவர், மர்ம வீரன், தேன்நிலவு, வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை போன்ற படங்களில் தன் வசீகர நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். குறிப்பாக சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களுடன் நடிக்கும்போது வைஜெயந்தி மாலாவின் நடிப்பில் சற்று கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.
ராதா சாலுஜா
துவாரகா என்கிற பாலிவுட் படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் ராதா சாலுஜா. இந்தியில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த இவரை, தன்னுடைய இதயக்கனி படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். இந்த ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பாத ராதா சாலுஜா, அப்படத்தில் எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டி அதகளம் செய்திருப்பார்.
இதையும் படியுங்கள்... யூடியூபர் இயக்கத்தில் நயன்தாரா... ‘மண்ணாங்கட்டி’க்காக லேடி சூப்பர்ஸ்டார் உடன் மீண்டும் கூட்டணி அமைத்த யோகிபாபு