மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதை புரோமோ மூலம் அறிவித்துள்ளது படக்குழு.

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அபிராமி நடிக்கும் இப்படத்தில் நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிக்க துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் கமிட் ஆகி இருந்த நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்கள் இப்படத்தில் இருந்து விலகினர். அவர்களுக்கு பதில் யார் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு நடிக்க கமிட்டனதாக தகவல் கசிந்தது. ஆனால் அதனை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்த படக்குழு தற்போது மாஸான புரோமோ மூலம் அதனை உறுதி செய்துள்ளது.

இதையும் படியுங்கள்... Singer Mano: 'லெவன்' படத்திற்காக டி.இமான் இசையில்... முதல் முறையாக பாடிய பாடகர் மனோ!

அதன்படி தக் லைஃப் படத்தில் புது தக் ஆக சிம்பு இணைந்துள்ளதாக குறிப்பிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் படமாக்கப்பட்ட காட்சியை வெளியிட்டு சிம்பு நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எல்லை பாதுகாப்புப் படை வாகனத்தில் சிம்பு வருவதால் அவர் இப்படத்தில் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரியாக நடிக்கிறாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

NEW THUG IN TOWN | #ThugLife | Kamal Haasan | Mani Ratnam | #STR | AR Rahman | RKFI | MT | RG

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பார்க்கும்போதே எச்சு ஊறுதே... அடுப்பே இல்லாமல் ரம்யா கிருஷ்ணன் ரெடி பண்ணிய டேஸ்டான ரெசிபிக்கு குவியும் லைக்ஸ்