அந்த 4 மணி நேரம்.. ரூமில் கிடைத்த மாத்திரைகள்.. விஜய் ஆண்டனியின் மகள் மீராவை பற்றி பயில்வான் கூறிய தகவல்
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
bayilvan ranganathan about vijay antony daughter death
இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். இதில், மூத்த மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் வழக்கம்போல படுக்கை அறைக்கு உறங்க சென்றனர். மூத்த மகளும் தனக்கான அறைக்கு சென்றார்.
vijay antony
நேற்று அதிகாலை 3 மணியளவில் கண் விழித்த விஜய் ஆண்டனி, தனது மகளின் அறைக்கு சென்ற பார்த்தபோது, அங்கு அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் ஆண்டனி கதறி அழுதார். பின்னர், தனது உதவியாளர் உதவியுடன் மகளை மீட்டு கீழே இறக்கி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Meera Vijay Antony
இந்த நிலையில் நடிகரும், பிரபல பத்திரிகையாளரும் ஆன பயில்வான் ரெங்கநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “ விஜய் ஆண்டனி மக்கள் படிப்பில் கெட்டிக்கார மாணவி. சர்ச் பார்க்கில் படித்த அவரது இறப்பு செய்தி அறிந்து சக மாணவிகள், ஆசிரியைகளை அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நன்கு படிக்கூடியவர், நல்ல மார்க் எடுக்ககூடியவர், முதல் மாணவியாகவும் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நான்கு மணி நேரம் விஜய் ஆண்டனி மகள் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதில் எந்த விதமான தடயங்களும் தென்படவில்லை.
vijay antony
அதனால் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் உடற் கூராய்வு அறிக்கை பெற்ற பின்னர் மகளின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்த விஜய் ஆண்டனி. என்னை அமைதியாக பேசுகிறீர்கள் என நிறைய பேர் கூறுகிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தை தற்கொலை செய்து கொண்டார். அப்பா இறந்த வலியை தங்க முடியாமல் அதை மனதில் அடக்கி கொண்டேன். அதனால் என்னால் அதிர்ந்து பேச தெரியாது என இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனி மேடையில் பேசியதை கூறிய பயில்வான் பேசி சில நாள்களிலேயே இப்படியொரு சம்பவம் நடந்துள்ளதே என்று தெரிவித்தார்.
vijay antony daughter death
போலீசார் அவரது அறையை சோதித்தபோது மனஉளைச்சலுக்கான மாத்திரைகள் இருந்துள்ளன. அவரது செல்போனை சோதித்தபோதும் அதில் எந்த வித தடயங்களும் இல்லை. நள்ளிரவு 1 மணியளவில் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை விழுங்கிய பின்னர் தூங்க சென்றுள்ளார். அதற்குள் என்ன நடந்ததோ, 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடற் கூராய்வுக்கு பின்னர் மகள் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார் விஜய் ஆண்டனி.
bayilvan ranganathan about vijay antony
இதை சொல்லும் போது நாக்கு தழுதழுக்கிறது. விஜய் ஆண்டனி போல் யார்கிட்டையும் அதிகமாக பேசதவராக மீரா இருந்துள்ளார். இது அவருக்கு நேர்ந்த சோதனை. மிகவும் நல்லவரான விஜய் ஆண்டனிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்னர் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார். அவரது முக அமைப்பே மாறிய பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பழைய விஜய் ஆண்டனியாக மாறியுள்ளார்” என்று கூறியுள்ளார் பயில்வான் ரெங்கநாதன்.