தந்தை பெரியார் சிலை அவமதிப்பு: ராமதாஸ் கண்டனம்!

கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

PMK founder ramadoss condemns periyar statue insulted in coimbatore smp

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. சமத்துவபுரம் நுழைவு வாயிலில் தந்தை பெரியாரின் மார்பளவு சிலை உள்ளது. கம்பி வேலி அமைக்கப்பட்டு அதற்குள் சிலை மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை அந்த பெரியார் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

காவிரி விவகாரம்: கர்நாடக மக்கள் நலனில் ஒருபோதும் சமரசம் கிடையாது - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

கோவை மாவட்டம் வடசித்தூர்  பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள  தந்தை பெரியாரின் மார்பளவு சிலை மீது சிலர் மாட்டுச் சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தவும் போராடிய தலைவரின் சிலையை இவ்வாறு அவமதிப்பது கண்டிக்கத்தக்கது. 

 

 

பொது அமைதியையும்,  சட்டம் - ஒழுங்கையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளதா?  என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும்.  இதற்கு காரணமானவர்களையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios