அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை காலை 10:30 மணிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்க உள்ளார்.

12:04 AM (IST) Oct 19
நடிகர் தளபதி விஜய், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில், அனிருத் இசையில் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.
11:19 PM (IST) Oct 18
ஐசிஐசிஐ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.16.14 கோடி அபராதம் விதித்துள்ளது.
10:53 PM (IST) Oct 18
சமூக ஊடக தளமான பேஸ்புக் சேவையகம் புதன்கிழமை செயலிழப்பை சந்தித்துள்ளது. மேலும் பல பயனர்கள் புதிய பதிவை பதிவேற்றுவதில் சிக்கல்கள்கள் உள்ளதாக புகாரளித்தனர்.
10:39 PM (IST) Oct 18
ஒடிசாவின் புதிய கவர்னராக ரகுபர் தாஸும், திரிபுராவின் புதிய கவர்னராக இந்திர சேனா ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
09:59 PM (IST) Oct 18
உஜ்வாலா பயனாளிகளுக்கு தீபாவளியன்று ஒரு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
09:06 PM (IST) Oct 18
வீட்டிலிருந்து பணிபுரியும் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தனது ஊழியர்களுக்கு ஆடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
08:37 PM (IST) Oct 18
இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது எளிதானது அல்ல. அவற்றில் 10000க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கலாம்.
08:13 PM (IST) Oct 18
இப்போது விமானத்தில் பயணம் செய்யும் போது பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்துச் செல்வதற்கான புதிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன விதிமுறைகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
07:34 PM (IST) Oct 18
உங்களிடம் PF கணக்கு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
07:13 PM (IST) Oct 18
பெண் பத்திரிக்கையாளர் சவுமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது
07:13 PM (IST) Oct 18
பிரபல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான ஓலா அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதுபற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
06:35 PM (IST) Oct 18
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போருக்கிடையே அங்கு சிக்கித்தவித்த தமிழர்கள் 147 பேர் மீட்கப்பட்டு, தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்
06:08 PM (IST) Oct 18
காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
05:39 PM (IST) Oct 18
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையாக ரூ.1968.87 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
05:30 PM (IST) Oct 18
செமிகண்டக்டர், ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் மத்திய அரசுடன் ஐபிஎம் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது
05:14 PM (IST) Oct 18
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
04:59 PM (IST) Oct 18
பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் கடுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்
04:39 PM (IST) Oct 18
தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக திருநாவுக்கரசர் எம்.பி.யை நியமனம் செய்து காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது
04:39 PM (IST) Oct 18
காசா மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்
02:15 PM (IST) Oct 18
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை முறிவு மக்களவை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது
01:55 PM (IST) Oct 18
தளபதி விஜய் நடித்துள்ள, 'லியோ' திரைப்படம், நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் படிக்க
01:55 PM (IST) Oct 18
நடிகை ஜோதிகா, தோனியின் தீவிர ரசிகை என்றும்... ஆனால் அவரையே தன்னுடைய கணவர் சூர்யா பீட் செய்து விட்டதாக எமோஷ்னலாக கூறிய தகவல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் படிக்க
01:47 PM (IST) Oct 18
தந்தை - மகன் - பேரன் - கொள்ளுப்பேரன் என அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல் என ராகுல்காந்திக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
01:45 PM (IST) Oct 18
சென்னை ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் நாவலூரில் நாளை முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
01:33 PM (IST) Oct 18
தேசிய விருதை தனது தந்தை தேவாவுக்கு dedicate பண்ணுவதாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மதுரை ஏர்போர்ட்டில் பேட்டி அளித்துள்ளார்.
11:45 AM (IST) Oct 18
சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ரோகிணி தியேட்டர்-ரில் லியோ படம் ரிலீஸ் ஆகாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
11:11 AM (IST) Oct 18
சித்தார்த் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வரும் சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
10:34 AM (IST) Oct 18
பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் டுவிஸ்ட் ஆக கொடுக்கப்பட்ட டாஸ்கில் கூல் சுரேஷை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் நேரடியாக நாமினேஷனுக்கு தேர்வு செய்துள்ளனர்.
10:22 AM (IST) Oct 18
நாகை கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி விட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், தங்க சங்கிலிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட 9 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10:11 AM (IST) Oct 18
மக்களவை தேர்தலை மனதில் வைத்து மகளிருக்கு 1000 ரூபாய் திட்டத்தை திமுக செயல்படுத்தி இருப்பதாக சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.
09:15 AM (IST) Oct 18
'லியோ' படம் வெற்றிபெற வேண்டி அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
08:43 AM (IST) Oct 18
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.
08:17 AM (IST) Oct 18
சென்னையில் ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான ஆயிரம் விளக்கு, எழும்பூர், தாம்பரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
08:14 AM (IST) Oct 18
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருவேறு ஆலைகளில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
07:28 AM (IST) Oct 18
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருவேறு ஆலைகளில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக பட்டாசு கடைஉரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
07:24 AM (IST) Oct 18
திமுக அரசு ஒரு துண்டுச்சீட்டு அளவுக்கு கூட வாக்குறுதியை நிறைவேற்றாமல் 100 சதவிகிதம் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
07:21 AM (IST) Oct 18
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகலிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.