தெலங்கானா தேர்தல் காங்கிரஸ் பொறுப்பாளராக திருநாவுக்கரசர் எம்.பி. நியமனம்!

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக திருநாவுக்கரசர் எம்.பி.யை நியமனம் செய்து காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது

Congress appointed Su Thirunavukkarasar MP as telangana election observer smp

மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே  அறிவிக்கப்படவுள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தெலங்கானாவில் 55 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக திருச்சி எம்.பி., திருநாவுக்கரசரை நியமனம் செய்து காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

Congress appointed Su Thirunavukkarasar MP as telangana election observer smp

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014, ஜூன் 2ஆம் தேதி புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானது. அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று சந்திரசேகர் ராவ் முதல்வராக உள்ளார். தெலங்கானா மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி முனைப்பு காட்டி வருகிறது.

அதேசமயம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளதால் அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்காளர்களை கவரும் வகையி, மகாலட்சுமி உத்தரவாத திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி, ரூ.500 க்கு எல்பிஜி சிலிண்டர், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு!

மேலும், திருமணத்தின் போது பெண்களுக்கு, ரூ.50,000 முதல் 55,000 மதிப்புள்ள 10 கிராம் தங்கம் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கும் வாக்குறுதிகளும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios