Leo : லியோ திரைப்படம் ‘LCU’-ன் கீழ் வருகிறதா, இல்லையா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்ன சீக்ரெட்
நடிகர் தளபதி விஜய், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில், அனிருத் இசையில் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லியோ படத்துக்கு அனிருத் இசையமைக்க, படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வர வர, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோ திரைப்படம் வெற்றி பெற திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் விஷால், ராகவா லாரன்ஸ், திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “லியோ ரிலீஸ் ஆக இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. இந்த நேரம் மிகவும் உணர்வுப்பூர்வமானதாக உள்ளது. எனது எண்ணத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வாய்ப்பு கொடுத்த தளபதி விஜய்க்கு நன்றி. எங்களிடம் நீங்கள் காட்டிய மகத்தானது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உங்களது அர்ப்பணிப்புக்காக நான் எப்போதும் உங்களை மதிக்கிறேன்.இதில் ரத்தத்தையும், வியர்வையும் உழைப்பாக செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. லியோ படத்துக்கான பணிகள் தொடங்கி ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. இரவும், பகலும் உழைத்து இதை படைத்துள்ளோம். அதற்கான தருணம் எதையும் என்னால் மறக்க முடியாது. இதில் பணிபுரிந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
அன்பான ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. லியோ அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடையதாக இருக்கும். உங்களுக்கு அற்புதமான காட்சி அனுபவம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு ரசிகருக்கும் தனித்துவ அனுபவத்தை தர விரும்புவதால், படம் குறித்து ஸ்பாய்லர்கள் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இந்தப் படம் ‘LCU’-ன் கீழ் வருகிறதா, இல்லையா என்ற உங்களது அனைத்து எல்லா கேள்விகளுக்குமான பதிலை இன்னும் சில மணி நேரங்களில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அன்புடன் லோகேஷ் கனகராஜ்” என்று தெரிவித்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.