Jyothika About Suriya: தல தோனியை பீட் பண்ணிடீங்க சூர்யா..! ஆனந்த கண்ணீருடன் எமோஷ்னலாக பேசிய ஜோதிகா.!
நடிகை ஜோதிகா, தோனியின் தீவிர ரசிகை என்றும்... ஆனால் அவரையே தன்னுடைய கணவர் சூர்யா பீட் செய்து விட்டதாக எமோஷ்னலாக கூறிய தகவல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Jyothika Debut Hindi Movie
மும்பையைச் சேர்ந்த நடிகை ஜோதிகா, தன்னுடைய சகோதரி நக்மாவை தொடர்ந்து, திரையுலகில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது, மற்றும் ஜீ சினி அவார்ட்ஸ் ஆகியவற்றில் நாமினேட் செய்யப்பட்ட போதிலும் விருதுகளை பெறவில்லை.
Jyothika Debut Tamil Movie
இதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடித்த 'வாலி' திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். முதல் படமே இவருக்கு ஃபிலிம் பேர் விருது, பெஸ்ட் நியூ பேஸ் ஆக்ட்ரஸ் ஆஃப் தி இயர், தினகரன் ஃபிலிம் அவார்ட்ஸ், போன்றவற்றை பெற்று தந்தது.
'லியோ' படத்தை சட்டவிரோதமாக வெளியிட 1246 இணையதளங்களுக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Suriya and Jyothika First Combination Film:
வாலி படத்தை தொடர்ந்து, சூர்யாவுக்கு ஜோடியாக இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக முகவரி, விஜய்க்கு ஜோடியாக குஷி, அர்ஜூனுடன் ரிதம், போன்ற அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார் ஜோதிகா. தொடர்ந்து முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களில் நடித்து 90'ச கிட்ஸ்சின் கனவு கன்னியாக வலம் வந்தார் ஜோ.
Kaakka Kaakka Movie:
ஜோதிகா - சூர்யா இடையே காதல் ஊற்றெடுக்க காரணமாக அமைந்த திரைப்படம் 'காக்க காக்க'. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சூர்யா நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது மட்டும் இன்றி, சூர்யா - ஜோதிகாவின் கெமிஸ்ட்ரியும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
Suriya And Jyothika Marriage:
காதல் கிசுகிசு வர துவங்கியதும், வழக்கம் போல் அதனை மறுத்த இந்த ஜோடி... பெற்றோர் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டியதும், திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். மேலும் தமிழ் திரையுலகமே வியக்கும் வகையில் இவரக்ளின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. கலைஞர் கருணாநிதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
Jyothika Daughter Diya And Son Dev
தற்போது இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த நடிகை ஜோதிகா, தன்னுடைய குழந்தைகள் பெரியவர்களானதும் மீண்டும் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் செய்த துரோகம் இது தான்! டி.இமான் குற்றச்சாட்டு குறித்து பேசிய முதல் மனைவி மோனிகா!
Suriya Anchoring Neengalum Vellalam Oru Koodi:
இந்நிலையில் சூர்யா 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியது பற்றி கூறிய பிளாஷ் பேக் தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Suriya Beat Dhoni Jyothika emotional speech:
பொதுவாகவே சூர்யா மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். மிகவும் அமைதியானவர் என்பது அனைவரும் அறிந்ததே... எனவே இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்பது ஜோதிகாவுக்கு ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சூர்யா இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கியதை பார்த்து ஷாக்காகி விட்டாராம். இதனால் சூர்யாவை பார்த்து, "நான் தோனியின் மிகப் பெரிய ரசிகை, ஆனால் உங்கள் நிகழ்ச்சியை பார்த்த பிறகு தோனிக்கு ஒரு படி மேலே போயிட்டீங்க... இனிமேல் நான் உங்கள் ரசிகை என எமோஷ்னலாக ஆனந்த கண்ணீருடன் கூறியதாக அந்த நிகழ்ச்சியின் போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D