தீபாவளி சர்ப்ரைஸ்.. வீட்டுக்கு ஒரு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும்.. முதல்வர் அறிவிப்பு !!
உஜ்வாலா பயனாளிகளுக்கு தீபாவளியன்று ஒரு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு "தீபாவளி பரிசாக" இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அரசின் இந்த முடிவால் மாநிலத்தைச் சேர்ந்த 1.75 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றார். 632 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்குத் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
புலந்த்ஷாஹரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது முதல்வர் இதனை அறிவித்தார். பின்னர், ஹப்பூர் மாவட்டத்தில் ரூ.136 கோடி மதிப்பிலான 132 திட்டங்களுக்கு ஆதித்யநாத் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அங்கு மாநில பாஜக தலைவர் பூபேந்திர சவுத்ரி, மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர், உ.பி சமூக நலத்துறை அமைச்சர் அசீம் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் எல்பிஜி இணைப்புகளுக்கான மானியத்தை அதிகரிப்பது குறித்த மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பை குறிப்பிட்டு ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரிசு வழங்கி சிலிண்டர் விலையை 300 ரூபாய் குறைத்துள்ளார் என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
"இப்போது நாங்கள் உஜ்வாலா திட்டத்தின் ஒவ்வொரு பயனாளிக்கும் தீபாவளி பரிசாக ஒரு எல்பிஜி சிலிண்டர் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்" என்று புலந்த்ஷாஹரில் முதலமைச்சர் கூறினார். 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எல்பிஜி எரிவாயு இணைப்புகளைப் பெறுவது கடினமான பணியாக இருந்ததாக ஆதித்யநாத் கூறினார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது மத்திய அரசின் முன்முயற்சியாகும், இது BPL (வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள) குடும்பங்களுக்கு LPG இணைப்புக்காக நிதி உதவி வழங்குகிறது. மற்ற பாஜக திட்டங்களைப் பற்றிப் பேசுகையில், உ.பி.யில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 55 லட்சம் பெண்கள் வீட்டு உரிமையாளர்களாக மாறியுள்ளனர் என்றும், ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 2.75 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் முதல்வர் கூறினார்.