லோகி பொத்தி பொத்தி பாதுகாத்த லியோ பட சீக்ரெட்டை பொசுக்குனு போட்டுடைத்த உதயநிதி - என்ன பழக்கம்னா இது!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.
vijay, udhayanidhi stalin
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான லியோ நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
Udhayanidhi Stalin watched Leo
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லியோ படம் நாளை தமிழ்நாட்டில் மட்டும் 850க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளது. லியோ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் முன்வைக்கும் ஒரே கேள்வி இது எல்சியு-வில் வருமா வராதா என்பது தான். படக்குழுவும் இதை சீக்ரெட்டாகவே வைத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டிகளில் கூட இந்த சீக்ரெட்டை உடைக்க மறுத்துவிட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Udhayanidhi Stalin
ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் மூலம் லியோ திரைப்படம் எல்சியு-வில் தான் வருகிறது என்பது தெரியவந்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு லியோ படத்தின் ஸ்பெஷல் காட்சியை பார்த்துள்ளார். படம் தனக்கு மிகவும் பிடித்துப்போனதால், படம் முடிந்த கையோடு, நள்ளிரவு 2 மணிக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் படத்தின் விமர்சனத்தை பதிவிட்டதோடு, அதில் எல்சியு என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் உதயநிதியின் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
leo review
அந்த பதிவில், தளபதி விஜய் அண்ணாவின் லியோ சூப்பராக உள்ளது. லோகேஷ் கனகராஜின் பிலிம் மேக்கிங் அருமை. அனிருத்தின் இசை மற்றும் அன்பறிவு மாஸ்டருக்கு பாராட்டுக்கள். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு அதில் எல்சியு என்கிற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் லியோ எல்சியுவில் உள்ளது உறுதியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் பொத்தி பொத்தி பாதுகாத்து வச்சிருந்த சீக்ரெட்டை உதயநிதி ஸ்டாலின் இப்படி ஒரே பதிவில் போட்டுடைத்துள்ளதால் இதில் யார் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது.
இதையும் படியுங்கள்... லியோவுக்கு போட்டியாக வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' தமிழ்நாடு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!