இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: தமிழர்கள் 147 பேர் மீட்பு!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போருக்கிடையே அங்கு சிக்கித்தவித்த தமிழர்கள் 147 பேர் மீட்கப்பட்டு, தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்

Israel palestine war so far 147 tamil people rescued smp

இஸ்ரேல் - பாலஸ்தீனம்  நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழர்கள் பலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கித் தவிக்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி அங்குள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் வெளியிட்டு அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு அவர்களை தாயகம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் வாட்சப் குழுக்கள் அமைக்கப்பட்டு அங்குள்ள தமிழர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 158 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களுடன் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் கண்டறியபட்டது. அதன் அடிப்படையில், மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம், இதுவரை நான்கு கட்டங்களாக வந்த 98 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: மத்திய அரசு ஹேப்பி நியூஸ்!

அதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் முலம் டெல்லி வந்தடைந்த 23 தமிழர்கள், தமிழ்நாடு அரசினால் வரவேற்கப்பட்டு, விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், டெல்லியில் இருந்து 4 பேர் கோவைக்கும், 17 பேர் சென்னை விமான நிலையத்துக்கும், 2 பேர் மதுரை விமான நிலையத்துக்கும் வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசின் செலவில் ஏற்பாடு செய்த வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை இஸ்ரேலில் இருந்து தமிழர்கள் 121 பேர்,  தமிழ்நாடு அரசின் செலவிலும், 26 பேர் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர். அதாவதும் தமிழ்நாட்டை சேர்ந்த மொத்தம் 147 பேர் அங்கிருந்து வந்தடைந்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios