பட்டாசுத் தொழிலாளர்கள் பாதுகாப்பு: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் கடுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்

MNM Chief kamal haasan urges safety and protection of firecracker workers smp

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும்  நிலையில் பட்டாசு விற்பணையும், தயாரிப்பும் சூடுபிடித்துள்ளது. அதேசமயம், பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, தமிழ்நாட்டை சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் பட்டாசு தொழிலுக்கு பெயர் போன சிவகாசி அருகே அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் விபத்து நடந்து வருகிறது. அண்மைய நிகழ்வாக,  சிவகாசி அருகே வெவ்வேறு இடங்களில் உள்ள இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மாரனேரி கிராமம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் சிவகாசி அருகேயுள்ள, மங்களம் கிராமம் ஆகிய இரு வேறு இடங்களில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பும் பல்வேறு சமயங்களில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துல் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

காசா மருத்துவமனை தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு!

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பட்டாசு தயாரிப்பு முக்கியமாக இருக்கும் நிலையில், அவர்களது பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

 

 

அந்த வகையில், பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் கடுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சிவகாசி கிச்சநாயக்கன்பட்டியிலும் மங்களம் கிராமத்திலும் பட்டாசு ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான வரன்முறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்னும் ஆய்வில், தொடர்புடைய அதிகாரிகள் கடுமை கூட்ட வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios