சந்திரமுகி 2, இறைவன் படங்களை காலி பண்ணிய ‘சித்தா’! ஓடிடி உரிமையை தட்டிதூக்கிய பிரபல நிறுவனம் - எப்போ ரிலீஸ்?
சித்தார்த் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வரும் சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
Chithha Movie
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் சித்தார்த். அந்த வகையில் புதுவிதமான கதைக்களத்தோடு சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அருண்குமார் தான் சித்தா படத்தையும் இயக்கி இருந்தார். இப்படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார்.
Siddharth starrer chithha
சித்தா படம் கடந்த மாதம் 28-ந் தேதி திரைக்கு வந்தது. சித்தா சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும் அதன் கதையின் மீது இருந்த நம்பிக்கையால் அதை சந்திரமுகி 2 மற்றும் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் படத்திற்கு போட்டியாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்தார் சித்தார்த். இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்திருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
chithha OTT release
சந்திரமுகி 2 மற்றும் இறைவன் படங்களுக்கு அதிகப்படியான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அப்படங்கள் சுமாராக இருந்ததால் அடுத்த சில தினங்களிலேயே அதன் திரையரங்குகளை ஆக்கிரமித்தது சித்தா. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டது. இப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
chithha ott release date
சித்தா படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் இப்படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. இறுதியாக ஹாட்ஸ்டார் நிறுவனம் சித்தா படத்தின் ஓடிடி உரிமையையும், விஜய் டிவி சாட்டிலைட் உரிமையையும் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளது. இப்படம் ஆயுத பூஜை விடுமுறையில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... உன்னை இழந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது... வீட்டில் நிகழ்ந்த மரணத்தால் உடைந்துபோன ஹன்சிகா