இது விபத்து அல்ல கொலைகள்.. உயிர் பலிக்கு முக்கிய காரணம் இதான்.. நாராயணன் திருப்பதி பகீர்..!
பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்தாலும், எத்துனை அரசுகள் மாறினாலும் சட்ட திட்டங்களை மதிக்காத மக்களும், விதிகளை கடைபிடிக்காத, அமல்படுத்தாத அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை இந்த கொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். லஞ்சம், லஞ்சம், லஞ்சம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருவேறு ஆலைகளில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து இது போன்ற விபத்துகள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புரையோடி போயிருக்கிற ஊழல், லஞ்சத்தையே இந்த சம்பவங்கள் வெளிப்படுத்துகிறது. பெரிய ஆலைகளான சோனி, குருவி மற்றும் ஸ்டாண்டார்ட் போன்ற நிறுவனங்களில் இது போன்ற விபத்துகள் நிகழ்வது இல்லை என்பதே உண்மை.
இதையும் படிங்க;- இதெல்லாம் அனுமதிக்கவே முடியாது.. சமுதாயத்தை திருத்த வேண்டிய நீங்களே இப்படி சீரழிவை உருவாக்கலாமா? பாஜக கண்டனம்!
முறையான உரிமம் இல்லாது வாடகை வீடுகளில் பட்டாசுகளை தயாரிப்பதை அனுமதிப்பது, பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தாது, சட்டத்திற்கு புறம்பான வெடிபொருட்கள் பயன்படுத்துவதை கண்டுகொள்ளாதது என்பது போன்ற அனைத்து விதிமீறல்களையும் லஞ்சம் பெற்று கொண்டு அல்லது அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளும், சட்டவிரோதமாக தொழில் நடத்துபவர்களுமே இந்த விபத்துகளுக்கு காரணம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இது போன்ற சம்பவங்களை இனி விபத்து என்று அழைப்பதை விட கொலைகள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்தாலும், எத்துனை அரசுகள் மாறினாலும் சட்ட திட்டங்களை மதிக்காத மக்களும், விதிகளை கடைபிடிக்காத, அமல்படுத்தாத அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை இந்த கொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். லஞ்சம், லஞ்சம், லஞ்சம்.
இது தான் இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம். இனி இவை லஞ்சக் கொலைகள் என்று அழைக்கப்படட்டும். உயிரிழந்தவர்களுக்கு அரசு உடனே நிவாரணத்தை அறிவித்து விடுகிறது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் சட்ட விரோத தொழிலை செய்பவர்களும், அதை அனுமதித்த அதிகாரிகளும் தான். அவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட ஆவன செய்யப்பட வேண்டும். அரசு அளித்த நிவாரணத்தொகையையும் அவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட வேண்டும். இதற்கு உரிய சட்டம் இல்லையெனில், சட்டம் இயற்றப்பட வேண்டும். கடுமையான சட்டங்களும், உறுதியான நடவடிக்கைகளும் தான் பல உயிர் பலிகளை தடுக்கும். இல்லையேல் இது ஒரு தொடர்கதையாகும் என நாராயணன் திருப்பதி காட்டமாக கூறியுள்ளார்.