MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இதெல்லாம் அனுமதிக்கவே முடியாது.. சமுதாயத்தை திருத்த வேண்டிய நீங்களே இப்படி சீரழிவை உருவாக்கலாமா? பாஜக கண்டனம்!

இதெல்லாம் அனுமதிக்கவே முடியாது.. சமுதாயத்தை திருத்த வேண்டிய நீங்களே இப்படி சீரழிவை உருவாக்கலாமா? பாஜக கண்டனம்!

திரைத்துறையின் ஒரு இயக்குனரிடம் இது குறித்து கேட்ட போது, 'தமிழ் இளைஞர்கள், இப்படிப்பட்ட வார்த்தைகளை நடிகர்கள் சொல்வதை விரும்புகிறார்கள்' என்று சொன்னது,  உண்மையிலேயே திரைத்துறையினர் சமுதாயத்தை எப்படி சீரழிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 08 2023, 09:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், பாபு ஆண்டனி, கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

26

லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி லியோ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதில், நடிகர் விஜய் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தை பேசுவதை மியூட் செய்யாமல் அப்படியே வெளியிட்டு இருந்தனர். விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் இப்படம் கெட்ட வார்த்தை பேசி நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு, அதற்கு எதிர்ப்பும் கிளம்பிய வண்ணம் உள்ளன.  இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- அந்த ஒரு டயலாக்கால் லியோ படத்துக்கு வந்த புது சிக்கல்... படக்குழு மீது கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

36

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த அக்டோபர் 5-ம் வெளியான ஒரு திரைப்பட வெள்ளோட்டத்தில் பெண்களை இழிவுபடுத்தும் தரக்குறைவான வசனம் இடம்பெற்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ் திரைப்படங்களில் இது போன்ற தரக்குறைவான வசனங்கள் தொடர்ந்து  இடம் பெறுவதை அனுமதிக்க முடியாது. அதிலும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்டாடும் கதாநாயகர்கள் மூலம் இந்த வசனங்கள் வெளிப்படுவது துரதிருஷ்டவசமானது. சமுதாயத்தை திருத்த வேண்டிய பொறுப்புள்ள கலை உலகத்தினர் இளைஞர்கள் மத்தியில் சீரழிவை உருவாக்க காரணமாக அமைந்து விடக்கூடாது. 

46

திரைப்பட தணிக்கை துறை இது போன்ற வசனங்களை, ஆபாச காட்சிகளை தணிக்கையின் போது நீக்கினாலும், ஓ.டி.டி தளங்களில் வெளியிடும் போது நீக்கிய காட்சிகளை, வசனங்களை ஒளி, ஒலி பரப்புவது பொறுப்பற்ற செயல். அதில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால்,  "ஐயோ! கருத்து சுதந்திரத்தி‌ற்கு தடையா" என சிலர் கிளம்பி விடுகிறார்கள். 

56

கடந்த பொங்கலன்று பிரபல நடிகர் நடித்து வெளியான ஒரு திரைப்படத்தில்  ' ....த' என முடியும் ஒரு தரக்குறைவான வார்த்தை கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட பலரால் நாற்பதுக்கும் மேற்பட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டன. தணிக்கையில் அவை நீக்கப்பட்டன. ஆனால்,  ஓ. டி. டி தளங்களில் அவை வெளியான போது அந்த வசனங்கள் இடம் பெற்றன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

66

திரைத்துறையின் ஒரு இயக்குனரிடம் இது குறித்து கேட்ட போது, 'தமிழ் இளைஞர்கள், இப்படிப்பட்ட வார்த்தைகளை நடிகர்கள் சொல்வதை விரும்புகிறார்கள்' என்று சொன்னது,  உண்மையிலேயே திரைத்துறையினர் சமுதாயத்தை எப்படி சீரழிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. மக்களின் நன்னடத்தைக்கு உதாரணமாக விளங்க வேண்டிய பிரபல நடிகர், நடிகைகள் இளைஞர்களின் சீரழிவிற்கு காரணமாய் அமையலாமா? சிந்தியுங்கள் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved