சென்னை அடையாறு, மெரினா, ஆயிரம் விளக்கு, தியாகராயநகர், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், கிண்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

11:27 PM (IST) Dec 15
பான் கார்டு இல்லாமல் இவ்வளவு தங்கம் வாங்கலாம். அதேபோல எவ்வளவு தங்கம் ஒருவர் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பான வருமான வரி விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
10:39 PM (IST) Dec 15
மக்களுடன் முதல்வர் திட்டம் என்ற திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
10:39 PM (IST) Dec 15
2024ம் ஆண்டு புத்தாண்டை காஷ்மீரில் சுற்றுலா மேற்கொள்ள அருமையான சுற்றுலா திட்டம் வெளியாகி உள்ளது. ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜ் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
10:16 PM (IST) Dec 15
சிம்பிள் டாட் ஒன் இ-ஸ்கூட்டர் ரூ.99,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
07:38 PM (IST) Dec 15
அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
07:26 PM (IST) Dec 15
உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்பப் பெற முடியுமா? இதுதொடர்பான ரயில்வே விதி என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
06:40 PM (IST) Dec 15
போக்கோ இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற C65 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை, முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
06:35 PM (IST) Dec 15
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மழை நிவாரணப் பொருட்களை பாஜக தேசிய இணைப் பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.சியுமான டாக்டர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி அளித்துள்ளார்.
06:33 PM (IST) Dec 15
அயோத்தியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளது. 6 கூடார நகரங்களில் 15 ஆயிரம் விருந்தினர்கள் தங்குவார்கள். ஒன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் தெரிகிறது.
06:09 PM (IST) Dec 15
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்
05:31 PM (IST) Dec 15
ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் இந்தியாவில் Amazon, Flipkart வழியாக கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
05:29 PM (IST) Dec 15
பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதில் இன்னும் ரூ.1906.59 கோடி மத்திய அரசால் விடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் அளித்துள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது
04:58 PM (IST) Dec 15
அயோத்தி சர்வதேச விமான நிலையத்தில் முதல் விமானம் வருகிற 30ஆம் தேதி தரையிறங்க உள்ளது.
04:14 PM (IST) Dec 15
நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு செல்லாத நாளன்று திமுக எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
03:06 PM (IST) Dec 15
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி மாதம் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
03:05 PM (IST) Dec 15
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, உத்தரப்பிரதேச ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் கட்சி தொடங்கவுள்ளது
02:28 PM (IST) Dec 15
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன
02:02 PM (IST) Dec 15
சென்னை அடையாறு, மெரினா, கிண்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
02:00 PM (IST) Dec 15
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 26ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
01:59 PM (IST) Dec 15
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
01:56 PM (IST) Dec 15
கர்நாடகாவில் பழங்குடியின் பெண் நிர்வாணமாக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை பாஜக அமைத்துள்ளது
01:28 PM (IST) Dec 15
ராஜஸ்தான் முதல்வராக பாஜக எம்.எல்.ஏ. பஜன்லால் ஷர்மா பதவியேற்றுள்ளார். துணை முதல்வர்கள் இருவரும் பதவியேற்றுள்ளனர்
12:58 PM (IST) Dec 15
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. நாளை (டிச.16) மற்றும் நாளை மறுநாள் (டிச.17) கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12:46 PM (IST) Dec 15
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11:33 AM (IST) Dec 15
கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 10 மற்றும் 12ம் வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
10:52 AM (IST) Dec 15
சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட் உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லை. டெல்டா மற்றும் தென் மாவட்ட பகுதி தான் மழைக்கான ஹாட் ஸ்பாட் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
10:01 AM (IST) Dec 15
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:19 AM (IST) Dec 15
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
08:30 AM (IST) Dec 15
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
07:41 AM (IST) Dec 15
சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தை மேம்படுத்தாதது ஏன்? இந்த ஆண்டும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
07:41 AM (IST) Dec 15
இன்று அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.