கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு? பொது சுகாதாரத்துறை கூறுவது என்ன?

அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனாபாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தினமும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Corona infection will increase in Tamil Nadu after Kerala tvk

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தினமும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் தமிழகத்தில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 7ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 37 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் படிங்க;- கேரளாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டம்?

ஆனால், இதனை பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் உயர்வதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லைதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தினசரி 10க்கும் குறைவாகவே உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்திருப்பது கேரளா, சிங்கப்பூரில் மட்டும் தான். தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது போன்ற தவறான தகவலைப் பரப்பி மக்களை பதற்றம் அடையச் செய்ய வேண்டாம் எனவும் 
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் விளக்கமளித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios