2024 மக்களவை தேர்தல்: யாருக்கு வெற்றி? ஆட்சியமைப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இக்கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ளன. இரண்டு முறை ஆட்சியில் இருந்ததால் பொதுவாகவே பொதுமக்களிடம் ஏற்படும் ஆட்சிக்கு எதிரான மனநிலை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளிட்டவைகள் பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக கை ஓங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் அதனை எதிரொலித்துள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டை விட மிகப்பெரிய வெற்றியை பாஜக பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ETG கணக்கெடுப்பின்படி, இன்று மக்களவைத் தேர்தல் நடந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 323 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எதிர்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 163 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு அது பலனளிக்கவில்லை என்பதையே கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. பழம்பெரும் கட்சுயான காங்கிரஸ் 2024 மக்களவை தேர்தலில் 52-72 இடங்களில் வெற்றி பெறும் என ETG survey கணித்துள்ளது.
கருத்துக்கணிப்பின்படி, 2024 மக்களவைத் தேர்தலிலும் இந்தி பெல்ட்டில் பாஜகவுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது. வட இந்திய மாநிலங்களில் மட்டும் 136 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் 70-74 இடங்களிலும், ராஜஸ்தானில் 24 இடங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 27-29 இடங்களிலும், சத்தீஸ்கரில் 10-11 இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியாக் கூட்டணி 39 சதவீத வாக்குகளைப் பெறும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எந்த கூட்டணியிலும் இல்லாத ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 3 சதவீதம், பிஜு ஜனதாதளம் 2 சதவீதம், பிஆர்எஸ் கட்சி 1 சதவீதம், பிற கட்சிகள் 11 சதவீத வாக்குகளை பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்று மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசியல் கட்சிகளின் வெற்றி எப்படி இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக 308-328 இடங்கள், காங்கிரஸ் 52-72 இடங்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 24-25 இடங்கள், திமுக 20-24 இடங்கள், திரிணாமூல் காங்கிரஸ் 20-24, பிஜு ஜனதாதளம் 13-15 இடங்கள், பிஆர்எஸ் கட்சி 3-5 இடங்கள், ஆம் ஆத்மி 4-7 இடங்கள், பிர கட்சிகள் 66-76 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முதல்வராக பாஜகவின் பஜன்லால் ஷர்மா பதவியேற்பு!
மாநில வாரியான விவரம் பின்வருமாறு;
உத்தரப்பிரதேசம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 70-74
இந்தியா கூட்டணி: 4-8
பகுஜன் சமாஜ்: 0-1
இதர கட்சிகள்: 1-3
குஜராத்
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 26
மேற்குவங்கம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 17-19
இந்தியா கூட்டணி: 22-26
ராஜஸ்தான்
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 24
இந்தியா கூட்டணி: 0-1
மத்தியப்பிரதேசம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 27-29
இந்தியா கூட்டணி: 0-2
சத்தீஸ்கர்
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 10-11
இந்தியா கூட்டணி: 0-1
ஆந்திரா
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்: 24-25
தெலுங்கு தேசம்: 0-1
தெலங்கானா
காங்கிரஸ்: 8-10
பிஆர்எஸ்: 3-5
மகாராஷ்டிரா
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 27-31
மகா விகாஸ் கூட்டணி: 16-20
இதர கட்சிகள்: 1-2
தமிழ்நாடு
திமுக: 20-24
காங்கிரஸ்: 10-12
அதிமுக: 3-6
கர்நாடகா
பாஜக: 20-22
காங்கிரஸ்: 6-8
கோவா
பாஜக: 1
காங்கிரஸ்: 0-1
டெல்லி
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 6-7
இந்தியா கூட்டணி: 0-1
பஞ்சாப்
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 3-5
இந்தியா கூட்டணி: 6-10
ஜம்முகாஷ்மீர் / லடாக்
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 1-3
இந்தியா கூட்டணி: 3-4
இதர கட்சிகள்: 0-1
கேரளா
பாஜக: 0-1
காங்கிரஸ்: 11-13
சிபிஎம்: 3-5
ஐயுஎம்எல்: 1-2
இமாச்சலப்பிரதேசம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி: 3-4
இந்தியா கூட்டணி: 0-1
பிற கட்சிகள்: 0