Published : Sep 12, 2023, 07:13 AM ISTUpdated : Sep 12, 2023, 09:46 PM IST

Tamil News Live Updates:நடிகை விஜயலட்சுமி புகார்! விசாரணைக்கு ஆஜராகாத சீமான்

சுருக்கம்

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காலை 10.30 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

Tamil News Live Updates:நடிகை விஜயலட்சுமி புகார்! விசாரணைக்கு ஆஜராகாத சீமான்

09:46 PM (IST) Sep 12

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த 5 பைக்குகள் இதுதான்.. முழு விபரம் இதோ !!

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த தரமான 5 பைக்குகள் என்னென்ன, அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

09:30 PM (IST) Sep 12

Ayodhya Ram Mandir | அயோத்தி ராமர் கோவில் உருவான கதையும்... களமும்..!

அயோத்தியில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராமர் கோவில் உருவான கதை மற்றும் களத்தை விளக்கியுள்ளார் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா.

09:28 PM (IST) Sep 12

பிரமாண்டமாக வளரும் அயோத்தி ராமர் கோவில்.. கட்டுமானத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது தெரியுமா?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அனைவரிடத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் கட்டுமானத்திற்கு பின்னால் இருக்கும் சவால்கள் பற்றி விளக்குகிறார் நிருபேந்திர மிஸ்ரா.

07:57 PM (IST) Sep 12

தலைவரே நீங்களா.. கிங் விராட் கோலியின் உருவத்தை நாக்கால் வரைந்த ரசிகர் | வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஆன விராட் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் அவரின் அழகிய ஓவியத்தை பிரஷ் மூலம் இல்லாமல் நாக்கின் மூலம் வைரந்துள்ளார்.இது சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

07:19 PM (IST) Sep 12

ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கி.மீ வரை பயணிக்கலாம்.. பட்டையை கிளப்பும் மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவி 400

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 (Mahindra XUV 400) சுமார் ரூ.1.25 லட்சம் பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் சிறப்பு அம்சங்கள், மைலேஜ் மற்றும் விலை போன்றவற்றை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

06:50 PM (IST) Sep 12

எனக்கு சாக்லேட் வேணும்.. ரசிகரிடம் க்யூட்டாக சண்டை போட்ட தோனி.. என்ன மனுஷன்யா.!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல, பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

06:27 PM (IST) Sep 12

சோனியா காந்தி பதில் சொல்வாரா? சனாதன தர்மம் விவகாரம் தொடர்பாக பாஜக கேள்வி - தொடரும் சர்ச்சை

சனாதன தர்மம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சனாதன தர்மம் சர்ச்சை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த சர்ச்சையில் மவுனம் காக்கும் காங்கிரஸ் தலைமையை தாக்கி பேசியுள்ளார்.

05:50 PM (IST) Sep 12

ரேஷன் பொருட்கள் பதுக்கல்: இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்!

ரேஷன் பொருட்கள் பதுக்கல், கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

05:08 PM (IST) Sep 12

OnePlus 12R : 100W சார்ஜிங்.. Qualcomm Snapdragon 8 Gen 3 அம்சம்.. ஒன் பிளஸ் 12 ஆரின் தகவல்கள் கசிவு !!

ஒன் பிளஸ் (OnePlus 12R) ஸ்மார்ட்போன் குறித்த விலை மற்றும் பிற விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

04:34 PM (IST) Sep 12

நவம்பர் 1 முதல் ஜிஎஸ்டி தொடர்பான விதிகளில் பெரிய மாற்றம்.. என்னென்ன தெரியுமா.? முழு விபரம் இதோ !!

நவம்பர் 1 முதல் ஜிஎஸ்டி தொடர்பான இந்த விதிகளில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03:49 PM (IST) Sep 12

குறைந்த விலையில் தாய்லாந்துக்கு டூர் போகலாம்.. ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜ்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா.?

ஐஆர்சிடிசி நேபாளம், தாய்லாந்துக்கு மலிவு விலையில் ஏர் பேக்கேஜ் வெளியிட்டுள்ளது. அதன் விலை மற்றும் பிற அம்சங்களை பார்க்கலாம்.

03:32 PM (IST) Sep 12

திருமணத்தை மீறிய உறவு: பெண்ணை போட்டு தள்ளிய ராணுவ அதிகாரி!

திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்த பெண்ணை கொலை செய்ததாக ராணுவ அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

03:32 PM (IST) Sep 12

புதிய நாடாளுமன்ற ஊழியர்களுக்கு புதிய சீருடை!

நாடாளுமன்ற பணியாளர்களுக்கான புதிய சீருடை உட்பட பல மாற்றங்களுடன், அடுத்த வாரம் முதல் அமர்வை நடத்த, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகி வருகிறது. 

03:31 PM (IST) Sep 12

பெண் குழந்தைகளுக்கு சூப்பர் திட்டம்: அதிக ரிட்டன்ஸ் கிடைக்கும் - உடனே ஆரம்பியுங்கள்!

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயணளிக்கும் வகையில் நடைமுறையில் இருக்கும் சூப்பர் திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்

03:03 PM (IST) Sep 12

இனி படத்துல நடிக்க முடியாதபடி தடைவிதிப்போம் பாத்துக்கோங்க! மார்க் ஆண்டனி வழக்கு; விஷாலுக்கு நீதிபதி எச்சரிக்கை

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஷாலுக்கு நீதிபதி சரமாரியான கேள்விகளை முன்வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

02:52 PM (IST) Sep 12

நீலகிரி தேநீர் முதல் காஷ்மீரி பஷ்மினா வரை.. ஜி 20 விருந்தினர்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள் என்னென்ன?

காஷ்மீரி பஷ்மினா முதல் சுந்தர்பன் தேன் வரை, ஜி 20 மாநாட்டில் விருந்தினர்களுக்கு பிரதமர் மோடி என்ன பரிசுகளை வழங்கினார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

02:02 PM (IST) Sep 12

வெகேஷன் முடிந்து சென்னைக்கு மாஸாக வந்திறங்கிய விஜய் - வைரலாகும் வீடியோ

அமெரிக்கா சென்றிருந்த நடிகர் விஜய், தற்போது வெகேஷன் முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

01:26 PM (IST) Sep 12

Kawasaki Ninja ZX-4R இந்தியாவில் அறிமுகம்: ரூ.8.49 லட்சத்தில் அப்படி என்ன இருக்கு?

இந்தியாவில் ரூ.8.49 லட்சம் விலையில் Kawasaki Ninja ZX-4R பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் டெலிவரி தொடங்கவுள்ளது

01:13 PM (IST) Sep 12

கணவன் கொலை.. செப்டிக் டேங்கில் உடல்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய மனைவி.. நடந்தது என்ன?

குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கொலை செய்துவிட்டு உடலை செப்டிக் டேங்கில் வீசிய மனைவி 9 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார். 

12:55 PM (IST) Sep 12

தொடர்ந்து அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ; 16ம் தேதி முதல் பள்ளிகளில் கண் பரிசோதனை - அமைச்சர் தகவல்

சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் அலற்சி நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வருகின்ற 16ம் தேதி முதல் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

12:20 PM (IST) Sep 12

மத்தியப்பிரதேச தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் பணிக்குழு கூட்டம்!

மத்தியப்பிரதேச தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் பணிக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது.
 

12:02 PM (IST) Sep 12

தமிழ் சினிமாவுக்கு மதுரை தந்த மாமன்னன்... வைகைப்புயல் வடிவேலுவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?

நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:50 AM (IST) Sep 12

கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்: சுகாதாரத்துறை அமைச்சர் உயர்மட்ட ஆலோசனை!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார்.

11:50 AM (IST) Sep 12

நடிகை விஜயலட்சுமி புகார்: சீமான ஆஜராகவில்லை!

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், சீமான் ஆஜராகவில்லை

11:21 AM (IST) Sep 12

எங்க பகுதியில் நாங்க அணைக்கட்டுறோம்! தேவையில்லாமல் தமிழகம் தொல்லை தருகிறது! கடுகடுக்கும் முதல்வர் சித்தராமையா

காவிரி விவகாரத்தில் பாஜகவினர் இரட்டை வேடம் போட்டு, அரசியல் ஆதாயம் தேடுவதாக, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

10:59 AM (IST) Sep 12

தலைவர் 171-க்காக காத்திருந்த கமலுக்கு விபூதி அடித்துவிட்டு... கலாநிதி மாறனிடம் ஐக்கியமான ரஜினி - பின்னணி என்ன?

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக இருந்த தலைவர் 171 படம் கலாநிதி மாறனுக்கு கைமாறியது பற்றிய ஷாக்கிங் தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10:44 AM (IST) Sep 12

Today Gold Rate in Chennai : தாறுமாறாக எகிறும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு உயர்வு தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:12 AM (IST) Sep 12

அவர் செஞ்சதெல்லாம் மறந்துட்டீங்களா... அப்பாவை அவதூறாக பேசியவர்களுக்கு கதீஜா ரகுமான் கொடுத்த அல்டிமேட் பதிலடி

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடியில் சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக ஏ.ஆர் ரகுமானின் மகள் கதீஜா தெரிவித்துள்ளார்.

09:56 AM (IST) Sep 12

நடிகை விஜயலட்சுமி வழக்கில் திடீர் திருப்பம்.. பாய்ந்தது புதிய வழக்கு.. கைதாகிறார் சீமான்?

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புதிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

09:36 AM (IST) Sep 12

‘மறக்குமா நெஞ்சம்’ குளறுபடிகள் வருத்தமளிக்கிறது... ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக யுவன் வெளியிட்ட திடீர் அறிக்கை

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட குளறுபடிகள் வருத்தம் அளிப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

09:10 AM (IST) Sep 12

ராக்கெட்ரியின் ரியல் ஹீரோ நம்பி நாராயணனுடன் திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த மாதவன் - வைரலாகும் வீடியோ

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் வந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் மாதவன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

08:43 AM (IST) Sep 12

கல்லாபெட்டி எடப்பாடி பழனிச்சாமி! நீங்க செய்த சாதனை இதுதான்.. மாஸ் பதிலடி கொடுத்த அமைச்சர் MRK.பன்னீர்செல்வம்.!

முந்தைய அதிமுக அரசால் கைவிடப்பட்ட சர்க்கரைத் துறையினை செம்மை துறையாக்கிட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சிறப்பாக செயல்படும் அரசாக திகழ்ந்து வருகிறது என  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

07:24 AM (IST) Sep 12

நள்ளிரவில் மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்! அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்.!

வடகிழக்கு மாநிலங்களில் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது. 

07:23 AM (IST) Sep 12

Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. இன்னைக்கு இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடையாம்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், அடையாறு உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

07:22 AM (IST) Sep 12

சென்னையில் 479வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 479வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


More Trending News