நடிகை விஜயலட்சுமி வழக்கில் திடீர் திருப்பம்.. பாய்ந்தது புதிய வழக்கு.. கைதாகிறார் சீமான்?
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புதிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.
மேலும், கருக்கலைப்பு செய்ததை உறுதி செய்யும் விதமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து சீமானை கடந்த 9-ம் தேதி காவல்நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், கட்சிப் பணிகள் இருப்பதாக கூறி அன்றைய தினம் சீமான் ஆஜராகவில்லை. இன்று காலை 10,30 மணிக்கு ஆஜராக உள்ளார்.
இதையும் படிங்க;- 6 முறை கருக்கலைப்பு செய்தது உண்மையா? நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்.. இன்று நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்..!
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி புகாரின் அடிப்படையில் சீமான் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 6-வதாக மேலும் ஒரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆகையால், விசாரணைக்கு ஆஜராகும் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.