மத்தியப்பிரதேச தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் பணிக்குழு கூட்டம்!
மத்தியப்பிரதேச தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் பணிக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது.
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. எனவே, அம்மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே இருமுனைப் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், மத்தியப்பிரதேச தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் பணிக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6 மணியளவில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப்பிரதேச மாநில பணிக்குழு தலைவர் ஜிதேந்திர சிங், திக்விஜய சிங், பணிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்: சுகாதாரத்துறை அமைச்சர் உயர்மட்ட ஆலோசனை!
மத்தியப்பிரதேசத்தில் வெற்றி பெரும் பொருட்டு, சமையல் எரிவாயு ரூ.500க்கு கிடைக்கும்; மகளிருக்கு மாதந்தோறும் 1500 நிதியுதவி அளிக்கப்படும்; மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம்; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஏராளமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அளித்துள்ளது. அதேசமயம், மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான 39 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச தேர்தலில் 114 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றார். ஆனால், அக்கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் ஐக்கியமானார். இதனால், 2020ஆம் ஆண்டில் பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் இழந்தது. இதையடுத்து, பாஜக ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.