நள்ளிரவில் மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்! அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்.!
வடகிழக்கு மாநிலங்களில் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
earthquake
வடகிழக்கு மாநிலங்களில் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது.
earthquake11
இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததை அடுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொணடு சாலையில் தஞ்சமடைந்தனர். 20 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ, பொருட் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதேதேபால், கடந்த ஜூலை 21ம் தேதி உக்ருல் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.