Asianet News TamilAsianet News Tamil

‘மறக்குமா நெஞ்சம்’ குளறுபடிகள் வருத்தமளிக்கிறது... ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக யுவன் வெளியிட்ட திடீர் அறிக்கை

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட குளறுபடிகள் வருத்தம் அளிப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Yuvan Shankar Raja supports AR Rahman and speaks about Marakkuma Nenjam concert issue gan
Author
First Published Sep 12, 2023, 9:35 AM IST

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் மிகவும் வருத்தமளிப்பதாகவும், சக இசையமைப்பாளராக ரகுமானுக்கு ஆதரவளிப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சவாலான பணி எனவும், நல்ல நோக்கத்துக்காக நிகழ்ச்சி நடத்தினாலும், கூட்ட நெரிசல் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தவறான செயல்பாடுகளால் நோக்கம் சீர்குலைந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... சென்னை மக்களே.. இந்த மனுஷன போய் திட்டீட்டிங்களே! ஒரே பதிவால் இசைநிகழ்ச்சி பிரச்சனைக்கு முடிவுகட்டிய AR ரகுமான்

இதுபோன்ற பெரிய நிகழ்வுகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது முழு நம்பிக்கை வைப்பதாகவும், ஆனால் நிகழ்ச்சியில் இதுபோன்ற குளறுபடிகள் நடப்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கலைஞர்களின் பங்கும் இருக்க வேண்டும் என யுவன் கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்படுத்தப்படுவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்வார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சக இசையமைப்பாளர் என்ற முறையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்பதாக யுவன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... யாழ்ப்பாணத்தில் யாழ் கானம்... சந்தோஷ் நாராயணனின் லைவ் கச்சேரி கேட்க ரெடியா!

Follow Us:
Download App:
  • android
  • ios