இனி படத்துல நடிக்க முடியாதபடி தடைவிதிப்போம் பாத்துக்கோங்க! மார்க் ஆண்டனி வழக்கு; விஷாலுக்கு நீதிபதி எச்சரிக்கை
மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஷாலுக்கு நீதிபதி சரமாரியான கேள்விகளை முன்வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
vishal
விஷால் பிலிம் பேக்டரி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் விஷால் நடத்தி வருகிறார். அதன் மூலம் படம் தயாரிக்க மதுரை அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். இந்த தொகையை விஷாலால் திருப்பி செலுத்த முடியாததை அடுத்து அந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்று திருப்பி செலுத்தியது. விஷால் அந்த தொகையை தங்களுக்கு திருப்பி கொடுக்கும் வரை அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்களின் உரிமையை லைகாவுக்கு தருவதாக ஒப்புக்கொண்டார்.
vishal case
பல படங்களில் நடித்து சம்பாதித்த போதும் கடனை திருப்பி செலுத்தாமல் இழுத்தடித்து வந்த நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து விஷால் ரூ.15 கோடி பணத்தை நீதிமன்றத்தில் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையும் விதித்து இருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... Anitha Vijayakumar: நீங்க டாக்டரா.. இல்ல ஆக்டரா..? 50 வயதிலும் 25 வயசு மகளுக்கு டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமா
mark antony movie
அப்போது மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், மார்க் ஆண்டனி படத்துக்கும் விஷாலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இப்படத்தை வெளியிட தடை விதித்தால் மிகப்பெரிய இழப்பு நேரிடும் என கூறியதை அடுத்து அப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. தடையை நீக்கினாலும் நடிகர் விஷாலை நீதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார்.
Actor Vishal
தொடர்ந்து படத்தில் நடிப்பீர்கள் அதன்மூலம் சம்பாதிப்பீர்கள், ஆனால் கடனை மட்டும் திரும்ப செலுத்த மாட்டீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதி, விஷாலின் வங்கி விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதில் ஏதேனும் முரணாக இருந்தால் எதிர்காலத்தில் படத்தில் நடிக்க முடியாதபடி தடைவிதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஏய் அண்ணன் வர்றார் வழிவிடு... வெகேஷன் முடிந்து சென்னைக்கு மாஸாக வந்திறங்கிய விஜய் - வைரலாகும் வீடியோ