திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். இவரது திடீர் மறைவால் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிரபல இயக்குநரும், ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகருமான மாரிமுத்து இன்று காலை, டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீர் மாரடைப்பால் காலமானார்.

09:18 PM (IST) Sep 08
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் மக்களிடையேயான தொடர்பை மேலும் மேம்படுத்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும்
08:43 PM (IST) Sep 08
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது
08:17 PM (IST) Sep 08
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். டெல்லி விமான நிலையத்தில் கனடா பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
08:06 PM (IST) Sep 08
இன்றைய உலகத் தலைவர்களைச் சந்திப்பதற்கு முன், நாளைய உலகத் தலைவர்களுடன் சந்திப்பு. டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
07:18 PM (IST) Sep 08
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்தடைந்தார்
04:47 PM (IST) Sep 08
ஜி20 மாநாட்டையொட்டி அடுத்த இரண்டு நாட்களுக்கு உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
04:21 PM (IST) Sep 08
கேரளா - காங்கிரஸ் வெற்றி
உ.பி - சமாஜ்வாடி முன்னிலை
மேற்கு வங்கம் - ஆளும் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி
ஜார்கண்ட் - ஆளும் ஜே.எம்.எம். வெற்றி
திரிபுரா (2) - பாஜக இரண்டிலும் வெற்றி
உத்தரகாண்ட் - பாஜக வெற்றி
04:20 PM (IST) Sep 08
நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த விழா நாயகன் படத்தின் ஷூட்டிங்கில் தனக்காக ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்பி எடுத்துள்ளார்.
04:18 PM (IST) Sep 08
ஜி20 இரவு விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
04:18 PM (IST) Sep 08
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக - மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே கூட்டணி உறுதியாகியுள்ளது
03:28 PM (IST) Sep 08
எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து, இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் தன்னுடைய மனைவியின் 25 வருட ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.
03:01 PM (IST) Sep 08
அஞ்சல் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 உத்தரவாத வருமானம் கிடைக்கும். அதனைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
02:36 PM (IST) Sep 08
இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய X பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
02:27 PM (IST) Sep 08
இத்தாலிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா Aprilia RS 457 மாடலை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை காணலாம்.
02:17 PM (IST) Sep 08
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்
02:02 PM (IST) Sep 08
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டி வந்த நடிகர் மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத இவருடைய இழப்புக்கு, பிரபலங்கள் அடுத்தடுத்து கண்ணீர் மல்க தங்களுடைய இரங்கல்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
02:01 PM (IST) Sep 08
இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்த இயக்குனரும் - நடிகருமான மாரிமுத்து, அஜித் செய்த உதவி குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
02:00 PM (IST) Sep 08
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக அனைவரையும் ஆட்டிப்படைத்து வந்த மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் கடைசியாக குணசேகரனிடம் பேசிய போது அவர் கூறிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படிக்க
01:50 PM (IST) Sep 08
புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாண்டி உம்மன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
01:42 PM (IST) Sep 08
G20 உச்சி மாநாட்டிற்கு இந்திய அரசு பல்வேறு வகையான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
01:27 PM (IST) Sep 08
நாடு முழுவதும் நடைபெற்ற 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
01:16 PM (IST) Sep 08
எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவின் மரணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. மாரிமுத்து போல் இதற்கு முன் மாரடைப்பால் மரணமடைந்த பிரபலங்களைப் பற்றி பார்க்கலாம்.
12:57 PM (IST) Sep 08
இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் நினைத்ததை நீ சாதித்தாலும் இன்று இல்லாமல் போனது வருத்தமே என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
12:56 PM (IST) Sep 08
கேரளா புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
12:49 PM (IST) Sep 08
Ethir Neechal and Director Marimuthu Death : நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் குமார் பற்றி இவர் பேசும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
12:16 PM (IST) Sep 08
ஜி20 உச்சி மாநாடு கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைவர்கள் மற்றும் கலந்து கொள்ளாதவர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
11:36 AM (IST) Sep 08
தற்போதைய சூழலில் ட்ரெண்டிங் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இது சின்னத்திரை ரசிகர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.
11:33 AM (IST) Sep 08
ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியிடம் பழகி வந்த நிலையில் ஆசைவார்த்தை கூறி சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
11:19 AM (IST) Sep 08
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து உள்ளதால், அந்த சீரியலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
10:24 AM (IST) Sep 08
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆன நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
09:43 AM (IST) Sep 08
கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் இடதுசாரி வேட்பாளர் ஜெய்க்.சி. தாமசை விட 5,000 வாக்குகள் அதிகம் பெற்று சாண்டி உம்மன் முன்னிலையில் உள்ளார்.
08:47 AM (IST) Sep 08
ஜி20 உச்சி மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி தேவகவுடாவுக்கு ஜி20 விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
08:43 AM (IST) Sep 08
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
08:16 AM (IST) Sep 08
Train Cancelled : ரயில்வே செப்டம்பர் 13 வரை 30க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளது. முழுமையான பட்டியலை இங்கே பார்க்கலாம்.
07:54 AM (IST) Sep 08
போரூர் அஞ்சுகம் நகரில் பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதமடைந்தது.
வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. இந்த விபத்தில் 3 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.